விஜய் பேச மாட்டேங்கிறாரு, பேச மாட்டேங்கிறாருன்னு சொன்னீங்களே.. இன்னிக்கு சட்டமன்றத்துல பொளந்து கட்டிட்டாரு பார்த்தீங்களா? அவரு பேசாம இருக்குற வரைக்கும் தான் உங்களுக்கு நல்லது.. பேச ஆரம்பிச்சிட்டா உங்களால கதற கூட முடியாது.. ஒருத்தன் அமைதியா இருக்குறாருன்னா, அவன் கோழை இல்லை, வீரத்தை கட்டுப்படுத்தி வச்சிருக்காருன்னு அர்த்தம்..

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சிகளின் அத்தனை விமர்சனங்களுக்கும் தனது பாணியில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, திமுகவுக்குத் தெரிந்த ஊழல், போதை கலாச்சாரம், கொள்ளையடிப்பு மற்றும் சுரண்டல் போன்ற எவ்விதமான தேவையற்ற விஷயங்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களுக்கோ அல்லது தங்களது அமைச்சர்களுக்கோ தெரியாது என்றும், அதனைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றும் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். மேலும், தவெக அரசு 100% தூய்மையான ஆட்சியை வழங்குவதையே முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தங்களது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாக மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், காசு கொடுத்து ஓட்டு வாங்கும் ஒரு நச்சு கலாச்சாரத்தைத் தவெக சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், தங்களின் சுயநலப் போக்கால் ஒவ்வொரு அரசுத் துறையிலும் ஏற்படுத்திச் சென்றுள்ள ஓட்டைகளையும் முறைகேடுகளையும் தங்களது அரசு மிகத் தீவிரமாகத் தடுத்து, அடைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். “ஒரு குடும்பம் முக்கியமல்ல; தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதைச் சொல்லும் ஆட்சி இது” என்று கூறி, திமுகவின் குடும்ப அரசியலையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் அவர் மிகக் கடுமையாக மேடையில் சாடினார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தவெக அரசுக்கு எதிராகப் பல முனைகளில் இருந்தும் வரும் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “நம்ம ஆட்சிக்கு அவசர அவசரமாக சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காகத் தேதி குறிக்கிறார்கள்; அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை, தமிழ்நாட்டு மக்கள் அவர்களைச் சரியான நேரத்தில் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூலாகப் பதிலளித்தார். தவெக-வுக்கு “ஆட்சி செய்யத் தெரியாது” என அரசியல் பக்குவமற்ற முறையில் எழும் விமர்சனங்களுக்குத் தனது முதிர்ச்சியான நிர்வாகத் திறமையின் மூலமே பதிலடி கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தவெக அரசுக்கு எதிராக வெளியில் சொல்ல முடியாத பல சூழ்ச்சிகள் பின்னணியில் அரங்கேறி வருவதையும் சூசகமாகத் தெரிவித்தார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற அசம்பாவிதச் சம்பவம் குறித்துப் பேரவையில் பேசிய அவர், “அரசியல்னா இப்படியெல்லாம் கொடூரமாக இருக்கணுமா என்ன?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

தங்களது கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் மிகத் தெளிவாகப் பேரவையில் விளக்கமளித்தார். தந்தை பெரியார் குறித்துப் பேசிய அவர், பெரியார் சொன்ன கருத்துக்களில் தங்களுக்கு எதெல்லாம் ஏற்புடையதாக இருந்ததோ, அதை மட்டும்தான் தவெக எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் தங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே வெளிப்படையாக அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தீர்க்கமான “கடவுள் நம்பிக்கை உண்டு” என்பதையும் மிக ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உன்னதமான சமத்துவக் கோட்பாட்டைத் தங்களது முதன்மைக் கொள்கையாக அறிவித்துத்தான் தாங்கள் அரசியலுக்கே வந்ததாகக் குறிப்பிட்டார். தவெக-வின் கொள்கை எதிரி யார், தங்களின் அரசியல் எதிரி யார் என்பதைத் தாங்கள் ஏற்கனவே மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்து விட்டதாகவும் அவர் மறுமுறை நினைவூட்டினார். மேலும், மாநில உரிமைகளுக்காகத் தவெக தொடர்ந்து குரல் கொடுக்கும் அதே வேளையில், வெறும் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசுடன் (ஒன்றிய அரசுடன்) தேவையற்ற மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தங்களது அரசு விரும்பவில்லை என்றும், மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய உரிமைகளை முறைப்படிப் பெற்றுத் தமிழகத்தை முன்னேற்றுவதே தங்களின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடியான மற்றும் தெளிவான பதிலுரையைக் கண்ட தவெக தொண்டர்கள், இது தங்களின் தலைவரிடமிருந்து வந்த “வேற லெவல் அடி” என்று சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் தவெக அரசை “எதிர்த்துப் பேசினால் தான் எதிர்க்கட்சி” என்ற தொனியில் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது உரையின் நிறைவாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எவ்விதப் பதற்றமும் இன்றி, அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும் கொள்கை தெளிவுடனும் முதலமைச்சர் விஜய் ஆற்றிய இந்த உரை, தற்போதைய தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment