ஊழலை ஒழிக்க ஊதப்போறோம் விசில்.. தவெக தலைவர் விஜய்யின் பவர்ஃபுல் விளக்கம்..

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து அனல் பறக்கும் நகர்வுகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ (Whistle) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.

சின்னம் கிடைத்த மகிழ்ச்சியைத் தனது தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்ட விஜய், அந்தச் சின்னத்திற்கு அவர் அளித்துள்ள ‘மாஸ்’ விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தத்தின் ஒலி:
அடிதட்டு மக்களின் அடையாளம்
விசில் சின்னம் குறித்து விஜய் தனது அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

“விசில் என்பது வெறும் சத்தம் மட்டுமல்ல, அது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடு. ஒரு இலக்கை நோக்கி அயராது உழைப்பவர்கள், அந்த இலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி இது” என்று அவர் வர்ணித்துள்ளார்.

சாதாரண பாமரன் முதல் உழைக்கும் வர்க்கம் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த ‘விசில்’, வெற்றிக் கொண்டாட்டத்தின் குறியீடாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி:
சின்னத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் போது, தனது வழக்கமான பாணியில் ‘பஞ்ச்’ வசனங்கள் போல சில வரிகளை அடுக்கியுள்ளார் விஜய். குறிப்பாக, காவலர்களின் கையில் இருக்கும் விசில் எப்படிப் பாதுகாப்பின் அடையாளமோ, அதேபோல் தனது கட்சியின் சின்னமும் தமிழகத்தின் பாதுகாப்பிற்கானது என அவர் உணர்த்தியுள்ளார்.

“நல்லவர்கள் சின்னம் விசில்!”

“நாடு காப்பவர்கள் சின்னம் விசில்!”

“ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்!”

என அவர் முழங்கியது, சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் ‘விசில்’ சத்தம்:
2026 தேர்தலுக்கான பந்தயக் களம் தயாராகிவிட்டதைக் குறிக்கும் வகையில், “விசில் அடித்தாச்சு… தயாராகுங்கள்” என்ற தொனியில் விஜய் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. விஜய்யின் திரைப்பயணத்தில் ‘பிகில்’ (Whistle) மற்றும் ‘GOAT’ (விசில் போடு பாடல்) போன்றவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதே ‘விசில்’ தற்போது அரசியல் களத்திலும் அவருக்கு வெற்றியைத் தேடித்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment