கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியர்களே செலுத்த வேண்டுமாம். அதற்காக தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குறாங்களாம்.. ஏன் ஊழியர்களே அதை செலுத்த வேண்டும்? டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் லாபத்தை எடுத்து கொள்ளும் அரசு, அதை செலுத்தாதா? அப்படியே கூடுதல் செலவு இருந்தாலும் அந்த செலவை அப்பாவி குடிமகன் தலையில் தான் அதை கட்டணுமா? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மதுபான தொழிற்சாலை நடத்துபவர்களிடம் பாட்டிலுக்கு 10 ரூபாய் குறைத்து கொள்முதல் செய்ய ஒரு அரசால் முடியாதா? ஒரு குடிமகனின் கேள்வி
தமிழ்நாட்டில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் முக்கியத் துறைகளில் ஒன்றாக திகழும் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளும், அங்கு நிலவும் நடைமுறை சிக்கல்களும் அண்மைக்காலமாக பெரும் விவாதப்