ரூ. 20,000-க்கும் கீழ் குறைந்தது… ஆப்பிள் வாட்ச் வாங்க நல்ல Chance… மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் SE 2 சீரிசை நீண்ட காலமாக இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இது இருக்கிறது. இருவித அளவுகளில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் SE 2 ஒரு நாள் முழுக்க பயன்படுத்த தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும், இதன் மென்பொருள் அனுபவம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவோருக்கும் எளிதில் இதுபற்றி அறிந்து கொள்ள செய்திடும்.

இந்த நிலையில், தான் ஆப்பிள் வாட்ச் SE 2 இந்திய விலை குறைந்துள்ளது. இந்திய சந்தையில் ஆப்பிள் வாட்ச் SE 2 மாடலின் 40mm விலை அமேசான் தளத்தில் ரூ. 20,299 ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1,500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாடலின் விலை ரூ. 18,800 என குறைந்துவிடும்.

ஆப்பிள் வாட்ச் SE 2 மாடலில் அலுமினியம் கேஸ் மற்றும் ஸ்போர்ட் லூப் உள்ளது. இந்த மாடல் கிராஷ் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் வசதி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச்ஓஎஸ் 11 உடன் கிடைக்கிறது. இந்த வாட்ச்-ஐ தண்ணீருக்குள்ளும் பயன்படுத்த முடியும். இதற்காக 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களான இதய துடிப்பு மாறுபாட்டை கண்டறிவது, பிறகு எமர்ஜன்சி SOS எச்சரிக்கை அனுப்புவது போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்பிள் வாட்ச் SE 2 மாடல் ஐபோன் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுடன் இணைந்து இயங்கும்.

இதை கொண்டு பாடல் கேட்பது, டெக்ஸ்ட் அனுப்புவது, அழைப்புகளை மேற்கொள்ளளாம். முன்னதாக ஆப்பிள் வாட்ச்-ஐ போன் அல்லது லேப்டாப் உடன் கனெக்ட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

Leave a Comment