இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் பிஎஸ்என்எல் இன்னும் ஏர்டெல் ஜியோ போன்ற நெட்வொர்க்கிற்கு டெலிகாம் சேவையில் டஃப் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் அதிக வசதிகளை கொடுத்து தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இன்னும் நெட்வொர்க்கில் எந்த மாற்றமும் செய்யாமல் 5g வசதி கூட இன்னும் அறிமுகம் செய்யாமல் பெரிதாக கவர்ச்சி அம்சங்கள் இல்லாமல் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது பிஎஸ்என்எல். குறிப்பாக கிராமப்புறங்களில் சிட்டிக்கு வெளியே இருக்கும் பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றே சொல்லலாம். அப்படி இருக்கும் சமயத்தில்
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது 107 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி நாட்களை தற்போது குறைத்துள்ளது. இருப்பினும் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங் முறைகளில் எந்த மாற்றமும் இல்லை என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
அதாவது 107 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் அதற்கு 3 ஜிபி 4g டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. மேலும் 3 ஜிபி டேட்டா இருந்தவுடன் அதன் வேகம் 40kbps ஆகக்குறைக்கப்பட்டு தொடர்ந்து இன்டர்நெட் சேவை வழங்கி வருகிறது. இதன் வேலிடிட்டி நாட்கள் 35 நாட்களாக இருந்தது.
ஆனால் பிஎஸ்என்எல் தற்போது இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வேலிடிட்டி நாட்களை குறைத்து 28 நாட்களாக மாற்றி உள்ளது. ஏர்டெல்,ஜியோ நிறுவனங்களைப் போல பிஎஸ்என்எல் நிறுவனமும் வருமானத்தை பெருக்க இப்படி செய்தது என்றே சொல்லலாம். ஏனெனில் 28 நாட்கள் வேலிடிட்டி என்றால் வருடத்திற்கு 12 மாதங்கள் பதிலாக 13 மாதங்கள் நாம் இந்த 107 ரூபாய் பிளானை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதனால் பிஎஸ்என்எல்க்கு வருமானம் அதிகரிக்கும்.
பிஎஸ்என்எல் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கி வருகிறது கூடிய விரைவில் இந்தியா முழுவதும் வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏர்டெல் ஏர் பைபர் போல ஜியோ ஏர் பைபர் போல பிஎஸ்என்எல் வயர்லெஸ் பிராட்பேண்ட் 5G சேவையை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.