சிங்கிள் ரீசார்ஜ்.. 13 மாசம் வேலிட்டி.. வேற லெவல் பிளானை அறிவித்த bsnl.. இனி நோ டென்ஷன்

தொலைதொடர்பு நிறுவனங்கள் இன்றைய காலங்களில் மாதம் ரீசார்ஜ் என்ற பெயரில் மக்களின் பணத்தை உறிஞ்சி எடுக்கின்றனர். இன்றைக்கு எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் 220 ரூபாய்க்கு கீழ் யாரும் ரீசார்ஜ் பிளான் வைத்திருப்பதில்லை. அப்படி பார்த்தால் சுமார் 2640 ரூபாய்க்கு ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்து வருகிறோம்.

வருடா வருடம் மொபைலுக்கான ரீசார்ஜ் திட்டத்தை நிறுவனங்கள் உயர்த்தி கொண்டே செல்கின்றன. அந்த வகையில் நீண்ட நாட்களாக மக்களின் பொது சேவையில் இருக்கும் பிஎஸ்என்எல் எளிய மக்களும் நம் நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் குறைவான ரீசார்ஜ் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் சந்தாதாரராக இருந்தால் அல்லது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை வாங்க விரும்பினால் இந்த ஒரே ஒரு ரீசார்ஜ் மட்டும் செய்தால் போதும் மொத்தம் 13 மாதங்கள் அதாவது 395 நாட்கள் நமக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. அதில் டேட்டா,காலிங்,எஸ்எம்எஸ் எல்லாம் அடங்கிவிடும்.

அதாவது அந்தத் திட்டத்தின் விலை 2,399 ரூபாய். எந்த வித தடையும் இன்றி ஒரு நெட்வொர்க்கை நீண்ட நாட்கள் பயன்படுத்த விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இந்தியாவில் எந்த எண்ணுக்கும் முடிவில்லா காலிங் வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் வசதி இந்தியா முழுவதும் இந்த சலுகை செல்லுபடியாகும்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இது நம்முடைய தினசரி தேவைகளை பூர்த்தி செய்யும். ‌ டேட்டாவை பொறுத்தவரையில் தினமும்2 ஜிபி 4g டேட்டா வழங்கப்படுகிறது 2 ஜிபி முடிந்ததும் 40kps வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை தொடர்ந்து இருக்கும்.

Leave a Comment