லேப்டாப்பை சார்ஜ் போட்டு கொண்டே யூஸ் பண்றீங்களா..? போச்சு.. இனிமே இப்படி பண்ணுங்க..

கல்லூரி,அலுவலகங்கள்,வீடு என அனைத்து இடங்களிலும் அவரவர்களின் தேவைக்கேற்ப மடிக்கணினிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் டிவைஸை நாம் எங்கும் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். அப்படி இருக்கும் பொழுது அதன் பேட்டரி சப்போர்ட் மூலம் அதனை உபயோகிக்க முடியும்.

தொடர்ந்து சார்ஜ் போட்டுக் கொண்டு மடிக்கணினி பயன்படுத்துவது சரியா தவறா என பலரிடம் கேள்விகள் எழுவதுண்டு. ஏனெனில் மொபைல் போன்ற சாதனங்களை சார்ஜ் போட்டு கொண்டு பயன்படுத்தும் போது பல இடங்களில் அது வெடித்து சிதறி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது நாம் தினந்தோறும் செய்திகளில் பார்க்கின்றோம்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் மடிக்கணினியையும் நாம் சார்ஜ் போட்டு கொண்டு பயன்படுத்துவது சரியா என்று கேள்விகள் எழுவதுண்டு. சார்ஜ் போடும் பொழுது எந்த ஒரு எலக்ட்ரானிக் டிவைசும் அதன் வெப்பத்தை அதிகரிக்கும். அப்படி இருக்கும் சூழலில் வெப்பத்திலிருந்து முதலில் டிவைஸை பாதுகாக்க வேண்டும். இதனால் அதன் ஆயுள் காலம் நீடிக்கும். பேட்டரி அதிக நேரம் சூடாக இருந்தால் அது சீக்கிரமே அதன் பயன்பாடை இலக்க நேரிடும்.

நிபுணர்களும் இதையே பரிந்துரைக்கின்றனர். யாராவது சார்ஜ் போட்டுக் கொண்டே மடிக்கணினி பயன்படுத்தினால் அதன் பேட்டரி திறன் குறையக்கூடும் என்று சொல்கின்றனர். இருப்பினும் அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தற்போது வரும் மாடல்களில் மடிக்கணினியை அதிக சார்ஜ் செய்வதிலிருந்து பாதுகாக்கும் மற்றும் அதிக வெப்பமடைவதில் இருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன் வருகிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.

பேட்டரியை முழுவதுமாக ட்ரை செய்து சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறைந்தது 15 லிருந்து 20% இருக்கும்போது சார்ஜ் போட வேண்டும் என்றும் அது 85 லிருந்து 90% வந்தவுடன் சார்ஜ் போடுவதை நிறுத்த வேண்டும் என்று வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்கும் என்றும் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் தற்போது வரும் மாடல்களில் அதிக வெப்பநிலை தாங்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய வருவதால் சார்ஜ் போட்டு வேலை செய்தாலும் பெரிதாக சேதம் வராது என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Comment