Galaxy S26 series – சாம்சங் இந்த ஸ்மார்ட்போன் மேல இவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்கா? அசத்தல் காரணம்!

சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் Galaxy S26 series மேல் அபரிதமான நம்பிக்கை வைத்திருக்கிறது. அதன் அட்வான்ஸ்டு ஏஐ பயன்பாடு காரணமாக குறைந்தது 3.5 கோடி என்ற எண்ணிக்கையை விற்பனையில் தாண்டும் என்று எதிர்பார்க்கிறதாம்.

Galaxy S26 series

சாம்சங் நிறுவனம், தனது மொபைல் டிவிஷன் (MX), அடுத்த ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. அந்த திட்டத்தின்படி, S26, S26+, and S26 Ultra உள்ளிட்ட Galaxy S26 series ஸ்மார்ட்போன்கள் மட்டும் அடுத்த ஆண்டில் 3.5 கோடி என்கிற எண்ணிக்கைக்கும் அதிகமாக விற்க இலக்காக வைத்திருக்கிறது.

முந்தைய ஆண்டில் Galaxy S25 series போன்களின் விற்பனை மொத்தத்தில் 2.2 கோடியைக் கடந்த நிலையில், S26 series-இன் விற்பனை இந்த எண்ணிக்கையைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறது சாம்சங். அதேபோல், மொபைல் போன் டிவிஷன் மட்டும் ஒட்டுமொத்தமாக 24 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இந்த ஒரு பிரிவின் மூலம் மட்டும் வருமானம் 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கலாம் என்றும் இலக்கை நிர்ணயித்து பணியைத் தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான எஸ்26 சீரிஸின் படங்கள், விமர்சகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அது அறிமுகமான பின்னர் மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் சாம்சங் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்குதுனு!

Leave a Comment