Gemini chatbot in Maps: இனி டிராஃபிக்ல சிக்குமா உதவி பண்ண ஏஐ ரெடி!

கூகுள் நிறுவனம், தனது மேப்ஸில் ஜெமினி ஏஐ-இன் சாட்பாட் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது.

Gemini chatbot in Maps

கூகுள் மேப்ஸில் ஜெமினி சாட்பாட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இதன்மூலம் டிராஃபிக் அப்டேட்டுகள், எளிதான நேவிகேஷன் என இன்னும் பல வசதிகளை எளிமையாகப் பெற்றுக்கொள்ள முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில், பெரிய டெக் நிறுவனங்களும் சாட்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றன. தங்களின் எந்தெந்த வசதிகளில் இந்த சாட்பாட் வசதியை அறிமுகப்படுத்தலாம் என்று சிந்தித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன்படி, மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை நேரடியாக இந்த சாட்பாட் வாயிலாகக் கேட்டு கூகுள் மேப்ஸில் பதில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதி மேப்ஸ் பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னரே மேப்ஸுடன் ஏஐ வசதியை இணைக்கும் பணிகளை முன்னோட்டம் பார்த்தது கூகுள்.

இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய 250 மில்லியன் இடங்கள், அதாவது 25 கோடி எண்ணிக்கையிலான இடங்களை மேப்பிங் செய்து வைத்திருக்கிறது. இந்த இடங்கள் பற்றிய தகவல்களை கூகுள் ஜெமினி சாட்பாட் உதவியோடு ரியல் டைமில் நீங்கள் அப்டேட் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், வழக்கமாக மேப்ஸில் வரும் 100மீ இடதுபுறம் திரும்பவும் என்கிற வழிகாட்டல், 100மீ என்ன என்பதை வரையறுக்காது. அதனால், பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், ஜெமினி ஏஐ பயணங்களின் போது உங்களுக்கு அதைவிடத் தெளிவான வழிகாட்டுதல்களை, உரிய அடையாளங்களோடு வழங்கும் என்கிறது கூகுள். நீங்க இந்த அப்டேட்டை யூஸ் பண்ணிருந்தீங்கன்னா, அது எப்படி இருக்குனு மறக்காம கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

Leave a Comment