ரூ. 16 விலையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்

லாவா நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்- ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம்-க்கு அறிமுக சலுகை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் நாளை (ஜூன் 16) மதியம் 12 மணிக்கு அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விளம்பரப்படுத்தும் வகையில், முதலில் வாங்கும் 50 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சலுகை விவரங்கள்:

ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம் சிலிகான் வேரியண்ட் மாடலை பயனர்கள் ரூ. 16 விலையிலேயே வாங்கிட முடியும். இந்த சலுகை ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். சலுகையை பெற பயனர்கள் செக்-அவுட் செய்யும் போது “XTREME16” என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

புதிய ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம் மாடல் அமேசான் வலைதளத்தில் ஜூன் 16-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சிலிகான், நைலான் மற்றும் மெட்டல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் நைலான் மற்றும் மெட்டல் வேரியண்ட்களை வாங்கும் போது சிலிகான் ஸ்டிராப் இலவசமாக வழங்கப்படும்.

முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 16 மட்டுமின்றி, மற்ற வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம் சிலிகான் வேரியண்ட் உண்மை விலை ரூ. 4,499. எனினும், அறிமுக சலுகையாக இந்த மாடல் ரூ. 3,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த விலை அறிமுக தினத்தன்று மட்டுமே பொருந்தும்.

ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம் நைலான் வேரியண்ட் உண்மை விலை ரூ. 4,99 ஆகும். அறிமுக சலுகையாக இந்த மாடலின் விலை ரூ. 4,199 என மாறியுள்ளது. இந்த விலை அறிமுக தினத்தன்று மட்டுமே பொருந்தும்.

ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம் மெட்டல் வேரியண்ட் உண்மை விலை ரூ. 4,999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த மாடலின் விலை ரூ. 4,499 என மாறியுள்ளது. இந்த விலை அறிமுக தினத்தன்று மட்டுமே பொருந்தும்.

அறிமுக தினத்திற்கான சிறப்பு விலை மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ப்ரோவாட்ச் எக்ஸ்டிரீம் மாடலில் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், 466×466 பிக்சல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆல்வேஸ் ஆன்-டிஸ்ப்ளே வசதி, உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Leave a Comment