Google Translate இப்போது இன்னொரு பெரிய update கொண்டு வந்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், நீங்கள் பேசும் மொழியை உடனே வேறு மொழியாக மாற்றி காதில் கேட்க முடியும். அதுவும் ஹெட்ஃபோன் வழியாக liveஆ.
இந்த அப்டேட்டால் travel, meetings, foreign language conversations எல்லாவற்றுக்கும் பெரிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய feature எப்படி வேலை செய்கிறது என்றால், Google Translate appஐ open செய்து, live speech translation optionஐ enable பண்ண வேண்டும்.
பிறகு சரியான headphones பயன்படுத்தினால், எதிரிலிருக்கும் நபர் பேசும் மொழி உடனுக்கு உடன் translate ஆகி, உங்கள் காதில் கேட்கும். Screenஐ பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. Google சொல்வதுபடி, இந்த வசதி டிராவல் செய்பவர்களுக்கும், வெளிநாட்டு நண்பர்களோட பேசுறவர்களுக்கும் ரொம்ப useful.
Airportலில், hotelலில், taxiலில், local peopleகிட்ட என மொழி பிரச்னை இருக்கும் போது இந்த அப்டேட் எல்லாத்தையுமே ரொம்ப சுலபமாக்கிடும். இந்த update Google Translateஐ ஒரு simple translation appலிருந்து, real time language ஹெல்ப்பரா மாற்றி விடுகிறது.
முன்பு text அல்லது mic button press பண்ண வேண்டியிருந்தது. இப்போ headphonesலேயே லைவ் டிரான்ஷிலேஷன் கிடைப்பதால் experience இன்னும் இயற்கையா இருக்கும்.
இந்த feature முதலில் சில devices மற்றும் சில மொழிக்கும் மட்டுமே வந்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் பல மொழிக்கும் மொபைல்களுக்கும் இதை expand பண்ண Google திட்டமிட்டிருக்கிறது.