இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இன்பினிக்ஸ் ஹாட் 60i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனான ஹாட் 50i போன்றே காட்சியளிக்கிறது. இது ஹாட் 60 சீரிசில் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் வங்கதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹாட் 60i மாடலில் 6.78 இன்ச் LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G81 அல்டிமேட் பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5160mAh பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. சென்சார்களை பொருத்தவரை அக்செல்லோமீட்டர், காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 60i ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த எக்ஸ் ஓஎஸ் 15.1 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்லீக் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
வங்கதேசத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 60i ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 9800 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 11,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.