ஐக்கூ நிறுவனம் தனது அடுத்த என்ட்ரி லெவல் பட்ஜெட் ரக போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதன் நீடித்து உழைக்கும் தன்மையின் அடிப்படையில் நம்பகத்தன்மை மிக்க மொபைல் என்ற பெயரை பெற்றது ஐ க்யூ. இதனால் அடுத்தடுத்து வெளியாகும் மாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையிலும் கலக்கி வருகிறது. அந்த வகையில் ஐகியூ இசட் 10 லைட் போனை வருகிற 18-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம் :
6.74 இன்ச் எல் சி டி+ டிஸ்ப்ளே வசதியுடன் இந்த iqoo z10 lite மொபைலில் வெளிவரும் என தகவல் வந்துள்ளது. மேலும் இது 90 hz ரெப்ரஷ்ரேட்டுடன் பெரிய டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராஸசர் மீடியா டெக் 6300 சிப்செட் வசதியுடன் இந்த ஐ கியூ மொபைல் வருகிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 15 ஓ எஸ் மற்றும் ஐகியூ மொபைலின் சொந்த ஓஎஸ் ஆன ஃபன்டச் ஓ எஸ் 15 உடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த மாடலுக்கும் ஐகூ நிறுவனம் 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதில் 4ஜிபிரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்டில் கிடைக்கிறது. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் தற்போது வருகிற எந்த மொபைலிலும் இல்லாத மெமரி கார்டு ஸ்லாட் இந்த iqoo z10 lite மொபைலில் வருகிறது. இதனால் நீங்கள் கூடுதலாக மெமரி கார்டு ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் பின்புற 50 எம்பி சோனி ai கேமரா மற்றும் 2 எம்பி சென்சார் என டூயல் ரியல் கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 5 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் 6000mah கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 15 w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜரும் இதனுடன் வருகிறது.
இதன் விலை பத்தாயிரத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 18ஆம் தேதி வெளியாகும்.