ஐகூ நிறுவனம் சக்திவாய்ந்த அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், ஐகூ பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்வது மட்டுமின்றி தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்குவதையும் ஐகூ வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில், ஐகூ நிறுவனம் தனது Z10 ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் அதிக சக்திவாய்ந்த அம்சங்கள் நிறைந்த ஐகூ Z10 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 20,000-க்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சலுகை அமேசான் இந்தியா வலைதளத்தில் வழங்கப்படுகிறது.
ஐகூ Z10 இந்திய விலை விவரம்:
ஐகூ Z10 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 21,998
ஐகூ Z10 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 23,998
ஐகூ Z10 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 25,998
இந்தியாவில் பயனர்கள் ஐகூ Z10 ஸ்மார்ட்போனினை வாங்கும் போது ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 2,000 உடனடி தள்ளுபடி பெறலாம். வெவ்வேறு வங்கி கார்டுகளுக்கும் இதுபோன்று தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐகூ Z10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000-க்கும் கீழ் வந்துவிடும். இத்தனை அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் ரூ. 20,000-க்கும் குறைந்த விலையில் கிடைப்பது பயனர்களுக்கு நல்ல சலுகையாகவே இருக்கும்.
ஐகூ Z10 அம்சங்கள்:
ஐகூ Z10 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 5ஜி கனெக்டிவிட்டி, 50MP சோனி IMX882 OIS கேமரா, 32MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஐகூ தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இத்துடன் 7300mAh பேட்டரி, 90W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.