ஐகூ z9s மாடல் 5ஜி தற்போது அமேசான் தளத்தில் ஆஃபர் விலையில் கிடைக்கிறது ஐகூ தற்போது z10 மொபைலை வெளியிட்டது. அடுத்தடுத்த மாடலின் வருகையை பொறுத்து தற்போது ஐகூ z9s 5 ஜி மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி கிடைத்துள்ளது. அதன்படி இந்த மொபைல் 18,999 ரூபாய் விற்கப்படுகிறது. மேலும் வங்கி காடை பயன்படுத்தி இன்னும் குறைவான விலைக்கு இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம்.

இதில் அமலெட் டிஸ்ப்ளே 120 ஹெச் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. மேலும் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 7300 என்ற ப்ராசசர் கிடைக்கிறது. இது தினசரி உபயோகத்திற்கு எந்தவித இடையூறும் இன்றி இயங்கக் கூடியது. மேலும் கேமிங் மல்டி டாஸ்கிங் போன்ற செயல்களுக்கும் தடையின்றி ஸ்மூத்தாக இயங்கும்.
இதில் ஆண்ட்ராய்டு 14 ஓ எஸ் உடன் வருகிறது. இதற்கு இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். கேமராவை பொருத்தவரை 50 எம்பி சோனி கேமரா கிடைக்கிறது மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் வருகிறது. செல்பி கேமராவை பொறுத்த வரை 16 மெகாபிக்சல் இந்த போனில் உள்ளது.
மேலும் தற்போது vivo மாடலில் பிரபலமாகி இருக்கும் ஆரா ஃப்ளாஷ் லைட்டும் இடம் பெற்றுள்ளது ஐ பி ரேட்டிங் பொறுத்தவரை ஐபி 64 சான்றிதலுடன் வருகிறது மேலும் இது 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி வேரியண்டில் கிடைக்கிறது. இதில் 5000 பேட்டரி உள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 44 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.