சைனீஸ் மொபைல் நிறுவனமான ஐடெல் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏழை எளியோர்களும் வாங்கும் வகையில் ரூபாய் 7500-க்கு ஐடெல் சிட்டி 100 மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐடெல் சிட்டி 100 சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் 120hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் யூனிசாக் டி7250 என்ற என்ட்ரி லெவல் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. தினசரி கால் பேசுவதற்கும், whatsapp,பிரவுசிங்கிற்கும் இந்த பிராஸசர் பக்காவாக பயன்படும். அதைத் தவிர ஹையர் லெவல் கேம்ஸ், ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்துவது எடிட்டிங் போன்ற எந்தவித வேலையும் இதில் செய்ய முடியாது.
இந்த பிராஸசர் சப்போர்ட் செய்யாது. கேமராவை பொறுத்தவரை இதில் 13 மெகாபிக்சல் உடன் வருகிறது. முன்புற கேமராவை பொருத்தவரை 8 மெகாபிக்சல் கொண்டு செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஓ எஸ் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது.
இதில் 4 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 5200mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 18w சார்ஜரும் உடன் வருகிறது. இதில் 4ஜி நெட்வொர்க் ப்ளூடூத், வைஃபை, டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இன்று ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய ஒரு ஏ ஐ பியூச்சர்களும் இதில் இடம்பெற்றுள்ளது. விலைப் பொருத்தவரை 7,599 என்று பத்தாயிரம் ரூபாய்க்கும் கீழ் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் பள்ளி குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள், அவர்களின் பயன்பாட்டிற்கு பக்காவாக பொருந்தும்.