எதையும் விடுரது இல்ல போல…ஆமாங்க..ஜியோவின் அடுத்த அறிமுகம்..ஜியோபுக்..

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு புதிய வசதிகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.  பொதுவாக ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல புதுபுது தொழில்நுட்ப சாதனங்களை சந்தையில் வெளிவிடுவது வழக்கம். ஜியோ போன், ஜியோபாரத் மொபைல் போன்கள் போன்ற பல சாதனங்களை கொண்டு வருவர். அப்படிப்பட்ட வரிசையில் தற்போது பிரபல ஜியோ நிறுவனம் தங்களது படைப்பான ஜியோபுக் லேப்டாப்பை அமேசானில்  அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.

இதற்கான விளம்பரத்தினை அமேசான் நிறுவனம் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்பானது வருகின்ற ஜூலை 31ஆம் தேதி சந்தையில் வரவிருக்கிறது. இந்த லேப்டாப் கடந்த ஆண்டு வெளிவந்த ஜியோபுக் லேப்டாப்பின் அடுத்த கட்ட வெர்ஷன் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது கடந்த ஆண்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் மட்டுமே கிடைத்த நிலையில் இனி இதனை இ-வணிக நிறுவனங்களிலும் பெற்று கொள்ளலாம்.

available in blue colour
available in blue colour

அமேசானின் டீசர் மூலம் இந்த லேப்டாப்பானது கடந்த ஆண்டு வெளியான ஜியோபுக் லேப்டாப்பின் தோற்றத்தினை போன்றே உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பானது நமக்கு நீல நிறத்தில் கிடைக்கிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினரும் உபயோகப்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் எடையும் மிக குறைவே. இதன் எடை 990கிராம் மட்டுமே. எனவே இதனை கையாளுவதற்கு ஏதுவாக இருக்கும். இந்த லேப்டாப்பானது 11.6இன்ச் HD திரையையும் Qualcomm Snapdragon 665 SoC சிப்செட்டையும் கொண்டுள்ளது.

jiobook laptop
jiobook laptop

இதில் 2GB RAM  32GB eMMC ஸ்டோராஜையும் 128GB ஸ்டோராஜை அதிகப்படுத்திகொள்ள முடியும். மேலும் இது 5000mAh பேட்டரி தன்மையையும் கொண்டுள்ளதால் நாம் இதனை 8 மணி நேரம் வரை உபயோகப்படுத்திகொள்ள முடியும். மேலும் இதில் 3.5mm அடியோஜாக், 5.0 Bluetooth, HDMI mini, Wi-Fi போன்ற இதர வசதிகளும் உள்ளன. இதில் உள்ள தனித்துவன் என்னவென்றால் இதில நாம் நமது சிம்கார்டுகளை உபயோகித்து கூட இணைய வசதியை ஏற்படுத்தி கொள்ள முடியும். இதன் விலை ரூ.20000க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment