இந்திய சந்தையில் சைனீஸ் மாடல்களின் ஆதிக்கம் இருந்து வரும் நிலையில் அதற்கு இணையாக பட்ஜெட் விலையில் அதிரடி சிறப்பம்சங்களை கொடுத்து அவர்களுக்கு டஃப் கொடுக்க வருகிறது லாவா நிறுவனம். அந்த வகையில் புதிய லாவா பிளேஸ் அமோலட் 5ஜி மொபைல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் லீக்ஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இது எப்பொழுது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை சமூக வலைதளங்களில் பரவி வரும் லீக்ஸ் அடிப்படையில் இந்த தகவல்கள் பெறப்பட்டது.
லாவா பிளேஸ் அமோல்ட் 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் 3டி கர்வ் அமலோட் டிஸ்ப்ளே 120ஹட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இந்த மொபைல் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 6300 பிராசஸர் உடன் வருகிறது. இது தினசரி உபயோகத்திற்கு சிறந்ததாக இருக்கும். மல்டிடாஸ்கிங் லோ-கிராபிக்ஸ் மொபைல் கேமிற்க்கு ஸ்மூத்தாக இயங்கும்.
கேமராவை அமைப்பை பொருத்தவரை 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. மேலும் 2 மெகாபிக்சல் டெலி போட்டோ லென்ஸ் உள்ளது. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம். முன்புற செல்ஃபி கேமரா பொருத்தவரை இதில் 16 மெகாபிக்சல் கொண்டு வருகிறது. இதில் 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி வேரியண்ட், 6ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் வருகிறது. ஓஎஸ் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 14 உடன் இயங்கும்.
மேலும் இதற்கு இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைஃபை, என்எப்சி, ப்ளூடூத், 3.5mm ஜாக், டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வருகிறது. பேட்டரியை பொருத்தவரை இதில் 5000mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 33w சார்ஜிங் வசதையும் இடம் பெற்றுள்ளது.