Windows 10 சப்போர்ட்டை நிறுத்திய மைக்ரோசாஃப்ட்… உங்களுக்கு இருக்கும் ஆப்ஷன்ஸ் என்னென்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Windows 11 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், முந்தைய இயங்குதளமான Windows 10-க்கான சப்போர்ட்டை மைக்ரோசாஃப்ட் நிறுத்தியிருக்கிறது.

Windows 10 சப்போர்ட் நிறுத்தம் – என்ன நடக்கும்?

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரிலேயே Windows 11 அறிமுகப்படுத்தப்பட்டாலும், மெதுவான செயல்பாட்டால் விண்டோஸ் பயனாளர்கள் பலர் இன்னும் பழைய Windows 10 இயங்குதளத்தையே பயன்படுத்தி வருகிறார். செப்டம்பர் 2025 தரவுகளின்படி மொத்த பயனாளர்களில் 41% பேர் Windows 10 இயங்குதளத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

சப்போர்ட் முடிந்த நிலையில், Windows 11 இயங்குதளத்தில் இயங்குவதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கம்யூட்டர்கள், லேப்டாப்புகளை இலவசமாகவே Windows 11-க்கு அப்டேட் செய்துகொள்ள முடியும். அதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யாத சிஸ்டம்களுக்கு இன்னும் சில ஆப்ஷன்கள் இருக்கின்றன.

சப்போர்ட்டை நிறுத்துவது என்றால், இனிமேல் Windows 10 இயங்குதளத்துக்குத் தேவையான பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவிகளை மைக்ரோசாஃப்ட் இனிமேல் அப்டேட் செய்யாது. மைக்ரோசாஃப்ட் Windows 11-க்கு அப்டேட் செய்ய விரும்பாதவர்கள், மேலும் ஒரு ஆண்டுக்குப் பாதுகாப்பு அப்டேட்டுகளை ESU திட்டம் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடியும். இதற்கு மைக்ரோசாஃப்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று அதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Comment