10000 பட்ஜெட்.. 50mp கேமரா.. 8 ஜிபி ரேம்.. வருகிறது புதிய hmd மொபைல்.. என்ன மாடல்..?

ஹெச்எம்டி நிறுவனம் வெகு நாள் கழித்து புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அதுவும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய ஹெச்எம்டி போல்ட் என்ற மொபைலை வரும் நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

ஹெச்எம்டி போல்ட் (HMD BOLD) சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது பட்ஜெட் விலையில் வெளியாவதால் 90hz ரெஃப்ரெஷ் ரேட்டும் 1000 நிட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் பெரிய டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட் போனில் வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிராசசர் போல்ட் யூனிசாக் டி7200 எஸ்ஓபிசி உடன் இயங்குகிறது.

இந்த பிராசசர் கால்கள் பேசுவதற்கு பிரவுசிங், whatsapp போன்ற தினசரி உபயோகத்திற்கு சிறந்ததாக இருக்கும். இதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக 4 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. 128 ஜிபி வேரியண்ட் மற்றும் 256 ஜிபி வேரியண்டில் கிடைக்கிறது. மேலும் மெமரி கார்டு பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

கேமரா பொருத்தவரை 50 பிரைமரி கேமரா மற்றும் 0.8 எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியல் கேமரா அமைப்புடன் வருகிறது. இதனால் ஓரளவுக்கு நல்ல புகைப்படங்களை எடுக்க முடியும். முன்புற கேமரா அமைப்பை பொறுத்தவரை 8 மெகாபிக்சலுடன் வருகிறது. இதில் 5000mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு இது 20w சார்ஜரும் இந்த ஹச்எம்டி போனுடன் வருகிறது.

இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார். மேலும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பெற்றுள்ளது. இதனால் மல்டிமீடியாவை பயன்படுத்தும் போது சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற முடியும். மேலும் வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இணையதளத்தில் வெளியான லீக்ஸ்சின் அடிப்படையில் இந்த தகவல் அனைத்தும் பெறப்பட்டது. இதன் விலை 10000 பட்ஜெட்டில் அறிமுகமாகும். இது பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பாடம் சம்பந்தமான தேடுதல்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு இந்த மொபைல் சிறந்ததாக இருக்கும்.

Leave a Comment