நீண்ட நாள் வெயிட் ஓவர்.. வந்தாச்சு புதிய ஒன் பிளஸ் நாட் சீரியஸ்.. என்ன மாடல்..? புதுசா என்ன இருக்கு ?

பிரீமியம் மொபைல்களை மட்டும் விற்றுக் கொண்டிருந்த oneplus நிறுவனம் பட்ஜெட் விலைகளிலும் மொபைல்களை விற்க திட்டமிட்டது. அப்படி பட்ஜெட் ரசிகர்களுக்கு என்று அறிமுகப்படுத்தப்பட்டது தான் oneplus nord சீரிஸ் மொபைல். இது வரை வெளிவந்த அனைத்து மொபைல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்பொழுது அதில் nord ce 5 மொபைல் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

oneplus nord ce5 சிறப்பம்சங்கள் :

oneplus nord ce5 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் அமலோடு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 2392*1080 பிக்சல் ரெசல்யூசனுடன் 120hz ரெஃப்ரெஷ் ரேட்,1500 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. ப்ராசசர் பொருத்தவரை இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 8350 ஆட்டோ கோர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தினசரி உபயோகத்திற்கும் லோ கிராபிக்ஸ் கேம்கள் விளையாடுவதற்கு எந்த ஒரு இடையூறும் இன்றி ஸ்மூத்தாக இயங்கக் கூடியதாக இருக்கும். ஒஎஸ் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 15, ஆக்ஸிஜன் ஓஎஸ் 15.0வில் வருகிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் வருகிறது.

oneplus nord ce 5
oneplus nord ce 5

கேமரா பொறுத்தவரை இதில் 50 எம்பி சோனி சென்சார் உடன் ஓஐஎஸ் உடன் வருகிறது. மேலும் 8 எம்பி. அல்ட்ரா வைடு சென்சார் உடன் வருகிறது. முன்புற கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 16 மெகாபிக்சல் கேமரா வருகிறது. இதில் 7100mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் இந்த நார்டு சிஇ 5 மொபைலில் ஒன்பிளஸ் ஏ ஐ அம்சங்களை கொண்டு வந்துள்ளது. ஏ ஐ எரைசர், ஏஐ ஷாட் போன்ற ஒரு சில ஏஐ அம்சங்களை கொண்டு வந்துள்ளது‌. ஒன் பிளஸ் நாட் சிஇ 5 இன் விலை 8ஜிபிரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 24,999 முதல் தொடங்குகிறது. மற்றும் 8ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 20,999. 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 28,999 விலையில் கிடைக்கிறது.

Leave a Comment