இதுதான் ஆஃபர்.. 5000 ரேட் கட்.. அடிமட்ட விலையில் ஒன் பிளஸ் டேப்லெட்.. என்ன மாடல் தெரியுமா ?

ஒன் பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட் பிலிப்கார்ட் சேலில் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் ஒன் பிளஸ் பேட் கோ டேப்லெட் மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. அதன்படி தற்பொழுது 15000 ரூபாய் பட்ஜெட்டில் இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

oneplus tab go
oneplus tab go

ஒன்பிளஸ் பேட் கோ சிறப்பம்சங்கள் :
இந்த டேப்லெட் 11.3 இன்ச் அளவுள்ள எல்சிடி டிஸ்ப்ளே 2.4k ரெசல்யூசனுடன் பெரிய டிஸ்ப்ளே வருகிறது. இதில் 90 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 180ஹட்ஸ் டச் சாம்பலிங் ரேட் உடன் 400 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 99 பிராசசர் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஓ எஸ் சப்போர்ட் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 13 உடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.2 உடன் இயங்குகிறது.

8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த பேட் வருகிறது. கேமரா அமைப்பை பொருத்தவரை இதில் 8 எம்பி சிங்கிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு முன்புற கேமரா வருகிறது. மேலும் இதில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆப்ஷனும் கிடைக்கிறது. வீடியோ சூட்டிங் பொறுத்தவரை 1080 பிக்செல் குவாலிட்டியில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த டேப்லெட் போன்ற சாதனங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது ஒன்று பேட்டரி தான். இதன் பேட்டரி 8000mah கொண்டு வருகிறது. இதனை சார்ஜ் செய்வதற்கு 33w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. மல்டிமீடியா பயன்படுத்தும்போது சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற டால்பி அட்மாஸ் கொண்ட 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன் பிளஸ் பேட் கோ டேப்லட்டின் விலை 8ஜிபி ரேம் மற்றும் 120 ஜிபி மெமரி விலை 20,000க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது. தற்பொழுது 3000 ரூபாய்க்கு ரேட் செய்து மற்றும் பேங்க் ஆபர் 2000 போக 15,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Comment