7550 mah பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 8s gen 4.. 50mp சோனி கேமரா.. 90w சார்ஜ்.. அசத்தல் அம்சங்களுடன் வெளியான poco f7

poco நிறுவனம் இந்திய சந்தையில் இன்று அதன் மிட்ரேஞ்ச் பிளாக் ஷீப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி poco f7 போன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

poco f7 சிறப்பம்சங்கள் :
இது 6.8 இன்ச் கொண்ட அமலோட் டிஸ்ப்ளே 120ஹட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டு 3200 பீக் பிரைட்னஸ் உடன், இது டியுவி சர்டிஃபைடு சான்றிதழ் பெற்று வருகிறது. இதில் ஸ்னாப் டிராகன் 8 எஸ் ஜென்4 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு சப்போர்ட் செய்யும் வகையில் lpddr5x ram டைப் ufs 4.1 மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி உபயோகம், மல்டிடாஸ்கிங் ஹை கிராபிக்ஸ்கேம் என அனைத்திற்கும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் ஸ்மூத்தாக மொபைலை இயங்க வைக்கும்.

poco f7
poco f7

இதில் 50mp சோனி பின்புற டூயல் கேமரா உடன் ois சப்போர்ட்டுடன் வருகிறது. முன்புற செல்பி கேமராவை பொறுத்த வரை 20 மெகாபிக்சல் உடன் வருகிறது. இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை 7550mah என்ற பெரிய பேட்டரி கொண்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. மேலும் இதனை 22 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

கிட்டத்தட்ட மினி பவர் பேங்க் போலவே உள்ளது இதன் பேட்டரி. தண்ணீர் மற்றும் தூசு தடுப்பு பாதுகாப்பான ஐபி 66, ஐபி 68, ஐ பி 69 தர சான்றிதழ் உடன் வருகிறது. இன்று வழக்கமாக எல்லா மொபைலும் வரக்கூடிய ஏ ஐ ஃபீச்சர்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக 31999 விலைக்கு flipkart இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் பேங்க் ஆபர் முதலியவற்றை பயன்படுத்தும் போது இன்னும் குறைந்த விலைக்கு இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Comment