போடு சக்க.. தேதி பிக்ஸ் பண்ணியாச்சு.. அனல் பறக்கும் அம்சங்களுடன் வெளியாகும் புதிய ரியல் மீ போன்.. என்ன மாடல் ?

பட்ஜெட் விலையில் ரியல்மீ தரமான மொபைல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மிட் ரேஞ்ச் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. விளக்கேற்ற அம்சங்களுடன் தரமான மொபைல்களை தயாரித்து வழங்கும் ரியல் மீ தனது அடுத்த ரியல் மீ 15 சீரியஸில் மொபைல்களை களம் இறக்க உள்ளது.

அந்த வகையில் ரியல் மீ 15 5ஜி மற்றும் ரியல் மீ 15 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகமாக உள்ளன. தற்போது இதன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரியல் மீ. அதன்படி வருகிற ஜூலை 24ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு இந்த மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது.

ரியல் மீ 15 மாடல் சிறப்பம்சங்கள் :
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கர்வ் வடிவமைப்புடன் 144 ஹெட்ஸ் ரெப்ரஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அளவுள்ள பெரிய டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 6500 நிட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. டிஸ்ப்ளே பாதுகாப்பு பொருத்தவரை இதில் கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இடம்பெற்றுள்ளது. பிராசரை பொருத்தவரை இதில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்சாட் கொண்டு இயங்குகிறது.

மேம்படுத்தப்பட்ட இந்த பிராசசர் தினசரி உபயோகத்திற்கு எந்தவித தடையும் இன்றி பக்காவாக இயங்கக்கூடியது. தூசு மட்டும் தண்ணீர் பாதுகாப்பு வசதிக்காக ஐபி 69 ரேட்டிங் உடன் வருகிறது. சாப்ட்வேரை பொறுத்தவரை ரியல் மீ தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஏஐ அம்சங்களையும் கொடுத்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு புது சிறப்பு அம்சம் என்னவென்றால் கஸ்டமர்ர்களின் வாய்ஸ் கண்ட்ரோல் அடிப்படையில் அவர்களின் புகைப்படத்தை எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் 7000mah கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் பற்றிய முழு விவரங்கள் வருகிற ஜூலை 24ஆம் தேதி தெரியவரும் விலை பொருத்தவரை 25,000 முதல் 30,000 பட்ஜெட்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment