இந்தியாவில் மொபைல் நிறுவனங்களில் விவோ ஓபோவிற்கு அடுத்தபடியாக மிகவும் நம்பகதன்மை வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான ரியல் மீ அடுத்ததாக ரியல் 15 சீரியஸ் இல் மொபைலை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது இதைப்பற்றி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதன் லீக்ஸ் ஆன்லைனில் கசிய தொடங்கிவிட்டது.
இது realme 15 வரிசையில் 15, 15ப்ரோ, 15 ப்ரோ லைட் என மூன்று வகைகளில் புதிய ஸ்மார்ட் போன்கள் வெளிவர இருக்கிறது. இதற்கு முன் ஜனவரியில் ரியல் மீ 14, 14 ப்ரோ ப்ளஸ், 14 ப்ரோ லைட் போன்றவைகளில் மொபைலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முறையான அறிவிப்பு வரவில்லை என்றாலும் இதன் லீக்ஸ் இணையத்தில் பரவுவது என்னவென்றால் அடுத்த மாதம் 15 வரிசையில் ஒன்று அல்லது இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.
ரியல்மீ 15 சிறப்பம்சங்கள் :
இதில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 soc உள்ளது. இதில் 6000 mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது மேலும் இதை சார்ஜ் செய்வதற்கு 45w சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 120 hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் அமோலட் டிஸ்ப்ளே உள்ளது. 50 மெகா பிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளது. மேலும் இதில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெற உள்ளது.
இந்த மொபைல் 8ஜிபி +128 ஜிபி, 8ஜிபி + 128ஜிபி, 12 ஜிபி + 256 ஜிபி, 12 ஜிபி + 512ஜிபி போன்ற வேரியங்களில் கிடைக்கப்பெறுகிறது இதன் விலை பொருத்தவரையில் 18000 முதல் 20,000க்குள் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.