இந்திய சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் பிரான்டுகளில் ஒன்று ரெட்மி. என்ட்ரி லெவல் தொடங்கி உயர் ரக அம்சங்கள் நிறைந்த ஃபிளாக்ஷிப் தரம் வரையில் என பல்வேறு விலை பிரிவுகளில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
சீரான இடைவெளியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் சியோமி நிறுவனம் தனது ரெட்மி பிரான்டில் புதிய மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுப்பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ரெட்மி பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் GSMA IMEI தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. ரெட்மி 15C பெயரில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போனுடன் போக்கோ C85 ஸ்மார்ட்போனின் விவரங்களும் GSMA வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இரு ஸ்மார்ட்போன்களும் குளோபல், EEA மற்றும் இதர வெர்ஷன் என்று பலவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ரெட்மி 15C ஸ்மார்ட்போன் 25078RA3EA, 25078RA3EY, 25078RA3EL மற்றும் 25078RA3EE மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது.
போக்கோ C85 ஸ்மார்ட்போன் 25078PC3EE மற்றும் 25078PC3EG மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதுவரை இரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.
எனினும், ரெட்மி 15C மற்றும் போக்கோ C85 ஸ்மார்ட்போன்கள் IPS LCD பேனல், மீடியாடெக் ஹீலியோ G99 போன்று என்ட்ரி லெவல் பிராசஸர், LPDDR4X ரேம், eMMC 5.1 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 mAh பேட்டரி மற்றும் 18 வாட் மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.