5-ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன்… ஜொலிக்கும் தங்க நிறத்தில் அறிமுகம்… எந்த மாடல் தெரியுமா?

சியோமி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி என இரு ஸ்மார்ட்போன்களை புதிய நிறத்தில் அறிமுகம் செய்தது. இரண்டு நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் தற்போது ஷேம்பெயின் கோல்டு நிறத்தில் கிடைக்கின்றன.

முன்னதாக ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்பெக்டர் புளூ, டைட்டன் பிளாக் மற்றும் பேண்டம் பர்ப்பில் வீகன் லெதர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி மாடல் ஐவி கிரீன், டைட்டன் பிளாக் மற்றும் டூயல் டேன் பேண்டம் பர்ப்பில் வீகன் லெதர் எடிஷன் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது புதிய நிறம் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் பயனர்கள் அதிக ஆப்ஷன்களை பெற முடியும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய விலை விவரங்கள்:

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28,999
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,999

ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23,999

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஷேம்பெயின் கோல்டு நிற வேரியண்ட்கள் ஏற்கனவே அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் தேர்வு செயய்ப்பட்ட சியோமி விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

அறிமுக சலுகைகள்:

புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

Leave a Comment