6200mAh பேட்டரி, 90W சார்ஜிங்… புது நிறத்தில் அறிமுகமாகும் ரெட்மி போன்… எந்த மாடல்?

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்பெக்டர் புளூ, டைட்டன் பிளாக் மற்றும் ஃபேண்டம் பர்ப்பில் என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஷேம்பெயின் கோல்டு நிறம் இணைகிறது. புதிய ஷேம்பெயின் கோல்டு நிற ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 120 ஹெர்ட்ஸ் Curved OLED டிஸ்ப்ளே, 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP லைட் பியூஷன் 800 பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இறுக்கிறது.

இதன் ப்ரோ பிளஸ் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2.5x டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 14 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்ட்ரா பிராசஸர், கிராஃபைட் ஷூட், 50MP சோனி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் மாடலில் பில்ட்-இன் 6200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 ப்ரோ மாடலில் 5500mAh பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வழக்கப்படுகிறது. இத்துடன் இரு மாடல்களிலும் IP66, IP68 மற்றும் IP69 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஷேம்பெயின் கோல்டு நிற வேரியண்ட் சியோமி ரீடெயில் ஸ்டோர் தவிர்த்து அமேசான் வலைதளத்திலும் விற்பனைக்கு வருகிறது.

Leave a Comment