சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி பேட் 2 மாடலை அறிமுகம் செய்தது. இந்த டேப்லெட் WiFi only WiFi + Cellular என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. மிக மெல்லிய டிசைன், மிகக் குறைந்த எடை கொண்டிருக்கும் புதிய ரெட்மி பேட் 2 மாடல் அளவில் 7.36mm தடிமனாக இருக்கிறது. இதன் எடை வெறும் 510 கிராம் தான். இதன் செல்லுலார் வெர்ஷன் மட்டும் 519 கிராம் எடை கொண்டிருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரெட்மி பேட் 2 மாடலில் 11 இன்ச் 2.5K டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 600 நிட்ஸ் பிரைட்னஸ், TUV Rheinland சான்று பெற்றிருக்கிறது. இத்துடன் ரீடிங் மோட், டச்-ஆன்-வெட் மற்றும் ஃப்ளிக்கர்-ஃப்ரீ டிம்மிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ G100 அல்ட்ரா சிப்செட் கொண்டிருக்கிறது.
இத்துடன் 8ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, மெமரியை 2 டிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல் 9000mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆடியோவை பொருத்தவரை டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ அழைப்புகள் பேசவும் இந்த டேப்லெட் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ரெட்மி ஸ்மார்ட் பென் சப்போர்ட், 12 மணி நேரங்கள் வரை பயன்படுத்தும் வசதி, அல்ட்ரா-லோ லேடன்சி மற்றும் 10g ஆக்டிவேஷன் ஃபோர்ஸ் கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை ரெட்மி பேட் 2 மாடலில் வைபை 5, ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் மாடல் டூயல் 4ஜி சிம் சப்போர்ட் மற்றும் ஜிபிஎஸ் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டுள்ளது. இதர அம்சங்களாக ஃபேஸ் அன்லாக், சர்க்கிள் டு சர்ச், ஜெமினி, கால் சின்க், நெட்வொர்க் சின்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி பேட் 2 மாடல் ஸ்கை புளூ அல்லது கிராஃபைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூன் 24-ம் தேதி mi.com, அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் தொடங்குகிறது.
4ஜிபி ரேம், 128ஜிபி வைபை வெர்ஷன் விலை ரூ. 13,999
6ஜிபி ரேம், 128 ஜிபி வைபை + 4ஜி வெர்ஷன் விலை ரூ. 15,999
8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட வைபை + 4ஜி வெர்ஷன் விலை ரூ. 17,999
ரெட்மி பேட் 2 கவர் விலை ரூ. 1,299
ரெட்மி ஸ்மார்ட் பென் விலை ரூ. 3,999