ரெட்மி Pad Pro டேப்லெட் மாடலின் இந்திய விலை குறைந்துள்ளது. இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் சக்திவாய்ந்த டேப்லெட் மாடல்களில் ஒன்றாக ரெட்மி Pad Pro இருக்கிறது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி டேப்லெட் விலை தற்போது மேலும் குறைந்துள்ளது.
இந்த பிரிவில் 12-பிட் டிஸ்ப்ளே கொண்ட முதல் டேப்லெட் என்ற பெருமையுடன் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி Pad Pro மாடலில் 12.1 இன்ச் XL டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 2.5K ரெசல்யூஷன் வசதி, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது. இதில் கீபோர்டு மற்றும் பென்சில் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இரு அக்சஸரீக்களையும் பயனர்கள் தனியாக வாங்கிட வேண்டும்.
ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ள ரெட்மி Pad Pro மாடல் 10,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூடவே 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதிக சுமையற்ற இலகுவான பணிகளை சிறப்பாக செய்து முடிக்கவும், பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் ரெட்மி Pad Pro டேப்லெட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டேப்லெட்டில் உள்ள குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம் எத்தகைய சூழலில் பயன்படுத்தினாலும் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும்.
சலுகை விவரங்கள்:
இந்திய சந்தையில் ரெட்மி Pad Pro மாடல் 128 ஜிபி மெமரியுடன் வருகிறது. இந்த மாடல் ரூ. 21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரெட்மி Pad Pro விலை ரூ. 19,999 என மாறியுள்ளது.
மேலும், வங்கி சலுகையை சேர்க்கும் போது ரூ. 2000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது இந்த டேப்லெட்டின் விலையை ரூ. 17,999 என மாற்றுகிறது. இந்த சலுகை அமேசான் இந்தியா வலைதளத்தில் கிடைக்கிறது.