இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த மக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் தனது புது 5g மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் லீக்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி எம் 36 5g மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் சாம்சங்கின் சொந்த பிராஸசரான எக்ஸினோஸ் மற்றும் பின்புற ட்ரிபிள் கேமரா செட் அப் மற்றும் 6gb ரேம் போன்றவைகளை இந்த மொபைல் உள்ளடக்கி உள்ளது.
இதில் 6.6 ஃபுல் ஹெச்டி ஆமோலேட் மற்றும் 120ஹச் ரெப்ரஸ் ரேட்டுடன் இந்த டிஸ்ப்ளே வருகிறது. இதன் பிரைட்னென்ஸ் 1500 நெட்ஸ் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் வெயிலில் இதன் டிஸ்ப்ளே மிகவும் தெளிவாக இருக்கும். இதில் எக்ஸினோஸ் 1380 ஆக்டோ கோர் ப்ராஸசரை கொண்டுள்ளது. இந்த போனில் மாலி ஜி 68 mp5 ஜிபி யூ கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் சொந்த யுஐ, ஒன் யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டு இந்த போன் இயங்குகிறது. மேலும் இதில் 50 எம்பி ட்ரிபிள் கேமரா பின்புறத்திலும் 8 எம்பி அல்ட்ரா வைடு 2mb மைக்ரோ என கேமரா அமைப்பு உள்ளது. 16 மெகா பிக்சல் கொண்டு முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6500 mah கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை சார்ஜ் செய்வதற்கு 25 w சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் type c சார்ஜிங் போட்டுடன் வருகிறது. இதில் ப்ளூடூத் 5g, nfc டூயல் சிம் போன்றவர்களை உள்ளடக்கி உள்ளது. இதில் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி அமைப்புகளில் கிடைக்கிறது. மேலும் சைடு மவுண்டன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. இதன் விலை 13,500 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியிட்டு என்று விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் வெளியிடும்.