டெக்னோ நிறுவனத்தின் புதிய Pova Curve 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் பிராசஸர் கொண்டிருக்கிறது. ஸ்டார்ஷிப்-ஐ தழுவிய டிசைன் கொண்டிருக்கும் புது டெக்னோ ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் Full HD+ Curved AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கிறது.
மெமரியை பொருத்தவரை 8GB ரேம், 128GB மெமரி அதிகபட்சம் 16GB வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க AI வசதியுடன் கூடிய இரட்டை சென்சார்கள்: 64MP பிரைமரி கேமராவும், முன்பக்கம் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் IP64 தரச் சான்று பெற்ற கட்டமைப்பு கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் தண்ணீரிலும் அதிக சேதம் ஆவதை தடுக்கும்.
ஹார்டுவேர் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனில் டெக்னோ பிராண்டின் AI அசிஸ்டண்ட் Ella வழங்கப்பட்டுள்ளது. இது AI சார்ந்த வாய்ஸ்-ப்ரிண்ட் சப்ரெஷன் மற்றும் AI கால் அசிஸ்டண்ட் வசதிகளை வழங்குகிறது. இத்துடன் குறைந்த சிக்னல் உள்ள பகுதிகளிலும் கனெக்டிவிட்டி கிடைப்பதை உறுதிப்படுத்தும் இன்டெலிஜண்ட் சிக்னல் ஹப் சிஸ்டம் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
புதிய டெக்னோ Pova Curve 5G ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் ஆஃபர்கள்:
இந்தியாவில் டெக்னோ Pova Curve 5G ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் ரூ. 13,850 வரை எக்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 10 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை ஆஃபர் வழங்கப்படுகிறது.