டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பார்க் கோ 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்பார்க் கோ சீரிஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். டெக்னோ ஸ்பார்க் கோ 2 மாடலில் 6.67 இன்ச் டாட்-இன் 120Hz டிஸ்ப்ளே, நோட்டிபிகேஷனுக்காக டைனமிக் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் DTS டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யுனிசாக் T7250 ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹை ஓஎஸ் 15 கொண்டுள்ளது. மேலும், இதில் உள்ள ELLA AI பயனர் கேள்விகளுக்கு இந்திய மொழிகளில் பதில் அளிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சம்- நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் (No Network Communication) எனலாம். இது மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட அவசர கால தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்யும்.
டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாக், 8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வலைபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2 ஸ்மார்ட்போன் இன்க்-பிளாக், டைட்டானியம் கிரே, வெயில் வைட் மற்றும் டர்குயிஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 1-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.