விவோ நிறுவனம் இன்று அதனுடைய புதிய பிளாக் ஷீப் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இன்று விவோ எக்ஸ் போல்ட் 5 (vivo x fold 5 )மாடலை வெளியிட்டுள்ளது நிறுவனம். மேலும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த எக்ஸ் ஃபோல்ட் மொபைலை பிரித்தும் பயன்படுத்தலாம் மடித்தும் பயன்படுத்தலாம். இதன் முழு திரையை விரிக்கும் பொழுது அது 8.03 இன்ச் அளவு கொண்ட பெரிய அமலோட் டிஸ்ப்ளே மற்றும் 2480 * 2200 பிக்சல் ரெசல்யூசனுடன் வருகிறது. யுடிஜி கிளாஸ் புரொடக்ஷன் 120hz ரெஃப்ரஸ்ரேடன் வருகிறது. 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. மற்றும் இதில் 2k ரெசல்யூஷன் கொண்ட ஹச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் போன்ற பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல முழு திரையும் மடித்து பயன்படுத்தும் போது அதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் கவர் அமலோடு டிஸ்ப்ளே வசதியும் இந்த டிஸ்ப்ளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120hz ரெஃப்ரெஷ்ரேட் உடன் வருகிறது. இதிலும் டால்பி விஷன் சப்போர்ட் கிடைக்கிறது. கேமராவை பொறுத்தவரை இதில் 50 எம்பி சோனி சென்சார் உடன் பிரைமரி கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் உடன் ட்ரிபிள் லேயர் கேமரா செட்டப் உடன் வருகிறது.
மேலும் இதில் 3x அளவிற்கு ஜும்மிங் செய்யும் வசதியும் உள்ளது. முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை 20 எம்பி கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயல் 5ஜி, 4ஜி ஓல்ட், ப்ளூடூத் வைபை, ஜிபிஎஸ், என்எப்சி, டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலை பொருத்தவரைக்கும் சைட் மௌண்டைன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்குகிறது. கிராபிக்ஸ் கார்டு பொருத்தவரை அட்ரினோ 750 ஜிபியூ கிராபிக்ஸ் கார்டு வழங்கப்படுகிறது. ஓஎஸ் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 15 மற்றும் origin os 5 உடன் இயங்குகிறது. மேலும் இந்த மொபைலுக்கு சாப்ட்வேர் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று விவோ உறுதியளித்துள்ளது.
ஐபி x9 டஸ்ட் மற்றும் வாட்டர் தடுப்பு பாதுகாப்பு சான்றிதழ் உள்ளது. இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. பேட்டரி பொருத்தவரை இதில் 6000mah கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி கொடுத்தும் இதன் ஒட்டுமொத்த எடை வெறும் மிகவும் மெல்லியதாக உள்ளது பழைய ஜெனரேஷன் மொபைல் போனை ஒப்பிடும்போது மிகவும் ஸ்லிம்மாக உள்ளது.
இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 80w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வேரியண்ட் விலை 1,49,9999 ஆக உள்ளது. வருகிற ஜூலை 30ஆம் தேதி முதல் விவோ ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் மற்றும் ஆஃப்லைனில் அதிகாரப்பூர்வ விவோ கடைகளில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வருகிறது.