50 எம்பி சோனி கேமரா.. 5500 mah பேட்டரி… வேற லெவல் மொபைலை களம் இறக்கும் விவோ

விவோ நிறுவனம் புதிய Vivo Y400 Pro மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிமுக வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிட்டது விவோ.

Vivo Y400 Pro சிறப்பம்சங்கள் :
மீடியாடெக் டைமண்ட் சிட்டி 7,400 கொண்ட சிப்செட் இதில் பொருத்தப்பட்டு அறிமுகமாக உள்ளது. இந்த சிப்செட் மிக வேகமாகவும் இயங்கக்கூடியது அதாவது அதிக செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம் மற்றும் கேமிங் செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்க இந்த ப்ராசசர் உதவும். இதில் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே இதனுடன் 120 ஹெட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இது அதிக செயல் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக அதாவது 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்ஸையும் சிறந்த பாதுகாப்பு கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.

கேமரா அமைப்பை பொறுத்தவரையில் sony ஐ எம் எக்ஸ் 882 முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி பொக்கே லென்ஸ் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மற்றும் வீடியோ கால் மற்றும் செல்பி எடுப்பதற்கு 32 எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் வசதியும் உள்ளது.

ஏ ஐ ட்ரான்ஸ்லேஷன், ஏ ஐ ட்ரான்ஸ்கிரிப்ட் அசிஸ்டன்ட், ஏ ஐ சூப்பர் லிங்க், டச் சர்க்கிள் டு சர்ச் என பல ஏஐ வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. IR பிளாஸ்டர் இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது மேலும் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், மேலும் ஐபி 69 டஸ், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி உள்ளது. இதில் 5500mah பேட்டரி கொண்டுள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 90 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 5g,4g ஓல்டு,வைபை, டைப் சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இது 8 ஜிபி ரேம்+128gb மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் +256 gb மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலைப் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை மொபைல் வெளியாகும் தேதி அன்று இதன் விலை பற்றி அறிவிப்பை விவோ நிறுவனம் வெளியிடும்.

Leave a Comment