latest news
அப்போ ஜாலியா ஜிம்கானாதான்..இனி குடும்பமே வாட்ஸ் ஆப்லதான் இருப்பீங்க..அப்படி என்ன அப்டேட் வாட்ஸ் ஆப்ல..
மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி கொண்டுதான் வருகிறது. வாட்ஸ் ஆப் மூலமாக தற்போது சாட் செய்வதுடன் பல வசதிகளும் உள்ளன. வாட்ஸ் ஆப் கால்கள், நமது மன நிலைமையை பிரதிபலிக்கும் ஸ்டேட்டஸ் எனும் வசதி என பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இன்னும் ஒரு சிறப்பம்சத்தை அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இதற்கு நாம் வாட்ஸ் ஆப்பின் விண்டோஸ் 2.2324.1.0 எனும் வெர்ஷன் உள்ள வாட்ஸ் ஆப்பினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சரி அப்டேட் என்னனு தெரிஞ்சிkகணும்ல?. இனி நாம் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பில் உள்ள மிக முக்கியமான வசதி வீடியோ கால் தான். இந்த வீடியோ கால் முலம் நாம் மற்றவர்களை அவர்களின் முகத்தை பார்த்தே பேசி கொள்ளலாம். இதில் முன்னதாக 8 பேர் மட்டுமே வீடியோ கால் மூலம் பேசி கொள்ள முடியும். மேலும் 32 பேர் வாட்ஸ் ஆப் ஆடியோ கால்கள் மூலம் பேசி கொள்ளலாம். தற்போது மெட்டா நிறுவனம் இதன் மூலம் 32 நபர்கள் வீடியோ கால்கள் மூலம் பேசும்படியான புதிய வசதியினை கொண்டு வந்துள்ளது.
இதற்கு மேற்கூறிய வெர்ஷன் உள்ள வாட்ஸ் ஆப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த வசதி இப்போதைக்கு டெஸ்க்டாப்பில் மட்டுமே பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை நாம் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்தும் இந்த வசதி கிடைக்கவில்லை என கவலை வேண்டாம். கூடிய சீக்கிரம் மெட்டா நிறுவனம் இந்த வசதியினை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வார்கள்.