அண்ணன் வரார் வழி விடு.. 10610 mah பேட்டரி.. 50mp கேமரா.. வருகிறது சியோமியின் புதிய டேப்லெட்..

சியோமி தனது புதிய ஜியோமி பேட் 7s ப்ரோ மாடல் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் பிறகு உலக நாடுகளுக்கும் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும்.

ஜியோமி பேட் 7எஸ் ப்ரோ சிறப்பம்சங்கள் :
இந்த டேப்லட்டில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. இது கேமிங் மற்றும் எடிட்டிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது 144hz, 240 டச் சாம்பலிங் ரேட் 1000 நெட்ஸ் பிரைட்னஸ் வசதி ஹெச் டி ஆர் 10 பிளஸ் சப்போர்ட் டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் இந்த டிஸ்ப்ளேவில் உள்ளது. இவை அனைத்தும் புதிய ஜியோமி டேப்லெட்டில் இடம் பெற உள்ளது.

xiaomi pad 7s pro
xiaomi pad 7s pro

இதில் ஜிங் 01 பிராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் முன்பை விட அதிகமாக வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி முதன்மை கேமரா வழங்கப்படுகிறது. இதன் மூலம் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொள்ள முடியும். மேலும் இதில் 13 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓ எஸ் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 15 os உடன் இயங்குகிறது மேலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10610 mah பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் பயன்பாடு நீண்ட நேரத்துக்கு நிற்கும். இதன் பேட்டரி ஒரு பவர் பேங்க் இணையாக உள்ளது. இந்த பேட்டரி சார்ஜ் செய்வதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும் இதன் எடை 560 கிராமாக உள்ளது. இதனால் எடுத்துச் செல்வதற்கு கை கடகமாக இருக்கும்.

இதில் நான்கு மூலைகளிலும் ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ் சப்போர்ட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற முடியும் என்று ஜியோமி தெரிவிக்கிறது. மேலும் இதில் வைஃபை, usb டைப் சி போர்ட் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் இந்த ஜியோமி பேட் 7எஸ் ப்ரோ மாடலில் உள்ளது. இது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி‌ வேரியண்ட் உடன் வருகிறது. இந்த தகவல் அனைத்தும் ஆன்லைனில் கசிந்த தகவல்களே. உண்மையான விபரம் மற்றும் விலை பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பு இந்த ஜியோமி டேப்லட் வெளியாகும் அன்று அறிவிக்கப்படும்.

Leave a Comment