YouTube Updates: யூடியூப்ல புதுசா என்னென்ன அப்டேட் வந்துருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?

யூடியூப் நிறுவனம் யுஐ இண்டர்ஃபேஸின் புது லுக் உள்பட பல்வேறு அப்டேட்டுகளை வழங்கியிருக்கிறது.

YouTube Updates

Google-ஐத் தொடர்ந்து உலக அளவில் தினசரி அதிகம் பேர் விசிட்டடிக்கும் இரண்டாவது இணையதள முகவரிதான் youtube.com. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தத் தளத்தை மட்டும் மாதம் தோறும் உலக அளவில் 270 கோடி பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

யூடியூப் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் மூலம், தனது பயனாளர்களுக்குப் புதிய வசதிகளை வழங்கும். அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக புது வீடியோ பிளேயர், UI Refresh, கமெண்டுகளுக்கு வாய்ஸ் மூலம் ரிப்ளை அனுப்புதல் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்டுகளைக் கொடுத்துள்ளது. குறிப்பாக ஷார்ட்ஸ் மற்றும் டிவிக்களுடன் கனெக்ட் செய்வதை புதிய அப்டேட்டுகள் எளிதாக்கியிருக்கின்றன.

இந்த அப்டேட்டில் வந்திருக்கும் இரண்டு முக்கியமான விஷயங்களில் ஒன்று புதிய வீடியோ பிளேயர். பாரம்பரியான வீடியோ பிளேயருக்கு லேட்டஸ்ட் லுக் கொடுத்திருக்கிறது யூடியூப். ஆனால், இது பல்வேறு பயனாளர்களுக்கு எரிச்சல் தருவதாக சோசியல் மீடியாக்களில் விவாதங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

அதேபோல், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை ஃபார்வேர்டு அல்லது பேக்வேர்டு செய்வதை எளிதாக்கும் வகையில், டபுள் டேப் செய்தாலே போதும் என்கிற வகையிலான ஒரு அப்டேட்டும் வந்திருக்கிறது. டபுள் டேப் செய்கையில் எத்தனை நொடிகள் ஃபார்வேர்டு அல்லது பேக்வேர்டு செய்யப்படுகிறது என்பதை நீங்கள் ஸ்கிரீனில் பார்த்துக் கொள்ளலாம்.

அதேபோல், மற்றொரு முக்கியமான அப்டேட் என்று சொன்னால், பதின்பருவத்தினருக்கு மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான டூல்ஸும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இளம் வயதினருக்கெனவே உருவாக்கப்படும் வீடியோக்களில் இந்த வசதி கிட்டும் என்று யூடியூப் தெரிவித்திருக்கிறது. அப்டேட்டான யூடியூப் வசதிகளில் உங்களைக் கவர்ந்த அம்சம் எது என்பதை மறக்காமல் கமெண்ட்டில் சொல்லுங்க!

Leave a Comment