Connect with us

latest news

ஏர்டெல் ஜியோவுக்கு ஆப்பு.. பிஎஸ்என்எல் கொண்டு வந்த மாஸ் பிளான்..

Published

on

bsnl

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான சேவையை கொடுக்கிறது. தொலைபேசி இன்டர்நெட் என அனைத்து விதத்திலும் தரமான சேவையை வழங்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு நிலையான நெட்வொர்க் மக்களுக்கு தேவைப்படுகிறது. அதை பிஎஸ்என்எல் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து தனது சேவையை அளித்து வருகிறது. இடையில் பல நெட்வொர்க் வந்தாலும் போனாலும் பிஎஸ்என்எல் என்றும் நிலைத்து நின்று தங்களின் பங்களிப்பை கொடுத்து வருகிறது.

இன்று பெருமளவில் புழக்கத்தில் இருக்கும் ஏர்டெல்,ஜியோ போன்ற நெட்வொர்க்களின் ஒரு மாதத்தின் ரீசார்ஜ் விலை 300, 350 க்கு மேல் இருக்கிறது. இது சற்று கூடுதலாகவே இருக்கிறது. இந்த விலை ஏற்றத்தை ஏழை மக்களுக்கு உகந்ததாக இருக்காது. அதுவும் மாதத்திற்கு 28 நாட்கள் என வருடத்திற்கு 13 மாதங்கள் நம்மளை ரீசார்ஜ் செய்ய வைக்கிறது இந்த கார்ப்பரேட் கம்பெனிகள். இதற்கெல்லாம் முடிவு கட்ட விதமாகத்தான் பிஎஸ்என்எல் இந்த பிளானை அறிமுகப்படுத்தியது போல் தெரிகிறது.

தற்போது பிஎஸ்என்எல் 199க்கு புதிய போஸ்ட் பேட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இது 199 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. மாதம் முழுவதும் அன்லிமிடெட் காலிங் உடன் வருகிறது.
தினமும் 1.5 ஜிபி டேட்டா வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இன்று 30 நாளுக்கும் இந்த பிளான் வருகிறது. இதனால் ஏழை எளிய மக்களுக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.

 

google news