தர ரேட்டுக்கு வந்த செம மொபைல்.. சாம்சங் லவ்வர்ஸ் விட்டுறாதீங்க.. எந்த மாடல் தெரியுமா..?

இந்தியாவைப் பொறுத்தவரை என்னைக்குமே சைனீஸ் ஃபோன்களை விட சாம்சங் போனுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 06 5g ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இந்த மொபைலுக்கு அமேசான் நிறுவனம் 36 சதவீதம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மொபைல் தற்போது 7999 ரூபாய்க்கு கிடைக்கப்பெறுகிறது. மேலும் காட்டு ஆப்பர் கேஷ்பேக் போன்றவற்றை பயன்படுத்தி இன்னும் லாபகரமாக இந்த மொபைலை பெற்றுக் கொள்ள முடியும்.
Samsung Galaxy M06 5G
Samsung Galaxy M06 5G
சாம்சங் கேலக்ஸி எம் 06 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் இன்ஃபினிட்டி யூ நாச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதன் பிக் பிரைட்னஸ் 800 நிட்ஸ் ஆக உள்ளது. மேலும் இது 90 ஹெச் ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 6,300 என்ற 5g பிராசஸரை வழங்கி உள்ளது சாம்சங். ஒன் யூ வாய் 7.0 மற்றும் ஆண்ட்ராய்டு 15 os கொண்டு இந்த மொபைல் இயங்குகிறது.
ஒரு சில விஷயங்களை சாம்சங் குறை வச்சாலும் வழக்கமாக கொடுக்கும் 4 வருட பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுக்க தவறியதில்லை.  பின்பக்க 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி டெத் சென்சார் கொண்டு வருகிறது. செல்பி எடுப்பதற்கு 8 எம் பி கேமரா கொண்டு வருகிறது.
இதில் 4 மற்றும் 6 ஜிபி ரேம் வசதிகளில் கிடக்கிறது. மேலும் 5g டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் கிடைக்கிறது. சைடு மவுண்டன் பிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த சாம்சங் போனில் உள்ளது. இதில் 5000 mah கொண்டை பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 25w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment