தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆனால் அவருடைய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அதை கையாள அவர் வைத்துள்ள ‘பிளான் பி’ என்ன என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். ஒருவேளை பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் அல்லது நேரடி பிரச்சாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், அதை சவாலாக ஏற்று டிஜிட்டல் தளத்தை முழுமையாக ஆக்கிரமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘நேரில் வரவிடாவிட்டால் என்ன, ஒவ்வொரு வீட்டின் மொபைல் திரையிலும் நான் இருப்பேன்’ என்கிற ரீதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிடுவதுதான் அந்த அதிரடி திட்டம்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று அங்குள்ள உள்ளூர் பிரச்சனைகளை பேசுவதற்கு இப்போது நேரம் இல்லை. எனவே அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள், அந்த மண்ணின் வரலாறு மற்றும் விஜய்யின் தீர்வுகள் என பிரத்யேகமாக பேசி வீடியோ வெளியிட்டால், வெறும் 25 நாட்களில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் டிஜிட்டல் ரீதியாக கவர் செய்துவிட முடியும். இது அந்தந்த தொகுதி மக்களிடையே ‘நமது தொகுதியை பற்றித் தளபதிக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறதே’ என்கிற நெருக்கத்தை உருவாக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு வீடியோ வெளியிட்டு, அவை 24 மணி நேரமும் சமூக வலைதளங்களில் வைரலானால், அது மற்ற அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களை அப்படியே கீழே போட்டு தள்ளிவிடும். இன்றைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களிலேயே செலவிடுவதால், டிஜிட்டல் ரீதியிலான இந்தத் தாக்குதல் வாக்கு சதவிகிதத்தை அதிரடியாக உயர்த்தும். ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முதல் ரீல்ஸ் வரை பரவும்போது, தேர்தல் களம் முழுக்க விஜய்யின் பிம்பமே மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி என்று சட்டப் போராட்டங்களை நடத்துவதை விட மக்கள் மன்றத்தின் போராட்டமே வலிமையானது என்பதால், நேரடியாக மக்களிடம் பேசுவதே புத்திசாலித்தனம். 234 தொகுதிகளையும் நேரில் சென்று முடிக்க மாதக்கணக்கில் ஆகும் என்பதால், இந்த 25 நாள் ‘டிஜிட்டல் ரூட்’ மிக வேகமான பலனை தரும். இதன் மூலம் தேர்தல் செலவுகளும் கணிசமாக குறையும், அதே சமயம் சென்றடைய வேண்டிய இலக்கும் துல்லியமாக இருக்கும்.
தமிழகத் தேர்தலை பொறுத்தவரை இத்தகைய உத்தி சாத்தியமா என்கிற கேள்வி எழலாம். வெளிநாடுகளில் இந்த பாணி அரசியலில் சாத்தியமாகும் போது தமிழகத்திலும் நிச்சயமாக சாத்தியம் தான், ஏனெனில் தமிழகம் தான் இந்தியாவிலேயே அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று. கிராமப்புறங்களில் கூட இன்று ஸ்மார்ட்போன் ஊடுருவல் மிக அதிகமாக உள்ளது. எனவே, விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய மாஸ் ஹீரோ, அரசியல் தலைவராக மாறி தொகு வாரியாக வீடியோ வெளியிடும்போது, அது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். இது மற்ற கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளுவதோடு, விஜய்யை ஒரு நவீன கால அரசியல்வாதியாக மக்கள் முன்னிலையில் நிறுத்தும்.
இறுதியாக, முதலமைச்சர் நாற்காலியை எட்டுவதற்கு தேவைப்படுவது மக்களின் அபரிமிதமான ஆதரவு மட்டுமே. நேரடி பிரச்சாரத்திற்கு தடை வரும்போது துவண்டு விடாமல், அதையே ஒரு வாய்ப்பாக மாற்றி டிஜிட்டல் புரட்சி செய்வதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. 25 நாட்களில் 234 தொகுதிகளையும் இந்த வீடியோக்கள் மூலம் தொட்டுவிட்டால், தேர்தல் முடிவுகள் விஜய்க்கு சாதகமாக அமைவது உறுதி என்பதே அவருடைய பிளான் பி ஆக இருப்பதாக கூறப்படுகிறது.