இன்று ஓட்டு போட போகும் ஒவ்வொரு வாக்காளரும் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்.. கோடி கோடியாய் சம்பாதிக்கும் அரசியல்வாதி வேண்டுமா? கோடி கோடியாய் வரும் வருமானத்தை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்திருக்கும் விஜய் வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? மாறாத ஊழல் ஆட்சி வேண்டுமா? தவெகவினர் பதிவுகள் வைரல்..!

தமிழக திரையுலகின் உச்சக்கட்டத்தில் இருந்து கொண்டு, கோடிக்கணக்கான ரசிகர்களையும் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களையும் தன் பின்னால் வைத்துக்கொண்டு, அனைத்தையும் உதறிவிட்டு மக்கள் பணிக்காக விஜய் களமிறங்கியிருப்பது ஒரு மாபெரும் அரசியல் துணிச்சலாக பார்க்கப்படுகிறது. இதை இன்று ஓட்டு போட போகும் மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எந்த விமர்சனங்கள் வேண்டுமானாலும் வரட்டும் என்று அஞ்சாமல் விஜய் எடுத்திருக்கும் இந்த முடிவு, அவரது அசைக்க முடியாத தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஒரு நடிகராக புகழின் உச்சியில் இருக்கும்போது, வெற்றிகரமான ஒரு தொழிலை கைவிட்டுவிட்டு பொதுவாழ்விற்கு வருவதற்கு ஒரு தனிப்பெரும் ‘கட்ஸ்’ தேவை. அந்த தைரியத்திற்காகவே அவருக்கு ஒரு மிகப்பெரிய ‘சல்யூட்’ வைக்கலாம் என்று நடுநிலை வாக்காளர்களும் திரையுலகினரும் ஒருமனதாக கருதுகின்றனர்.

விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவர் தோல்வியுற்றதால் எடுத்த முடிவோ அல்லது பட வாய்ப்புகள் இல்லாததால் எடுத்த முடிவோ அல்ல. இன்றும் அவர் ஒரு படம் நடிக்கிறேன் என்று சொன்னால், அவருக்கு பின்னால் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்க தயாராக உள்ளனர். அத்தகைய வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை தூக்கி எறிந்துவிட்டு, “எனக்கு இனி இது எதுவுமே வேண்டாம், 100 சதவீதம் மக்கள் பணிக்காக மட்டுமே என்னை அர்ப்பணிக்க போகிறேன்” என்று அவர் அறிவித்திருப்பதை ஒவ்வொரு வாக்காளரும் நினைத்து பார்க்க வேண்டும்.

அரசியல் என்பது பல நேரங்களில் பணத்தை சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்படும் சூழலில், விஜய் ஏற்கனவே தான் சம்பாதித்த புகழையும் பொருளையும் மக்களுக்காக செலவிட வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் திருடவோ அல்லது தவறான வழியில் பொருள் ஈட்டவோ அரசியலுக்கு வரவில்லை என்பது ஒரு சாமானிய தமிழனுக்கும் தெளிவாக தெரிகிறது. “ஏதோ ஒன்று செய்வோம், மாற்றத்தை கொண்டு வருவோம்” என்கிற உயர்ந்த நோக்கம் மட்டுமே அவரை இந்த பாதைக்கு இட்டு வந்துள்ளது. தன்னிடம் இருப்பதை இழக்க தயாராக இருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே, பிறருக்கு எதையும் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர் விதைத்துள்ளார்.

விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகள் தமிழக மக்களுக்கு நன்மையானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது. ஒரு தமிழ்நாட்டு பிரஜையாக தூரத்தில் நின்று கவனிக்கும்போது, அவரது ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்டதாகவும் முதிர்ச்சியுடனும் இருப்பது திருப்தி அளிக்கிறது. இந்த நல்லெண்ணம் மக்களிடம் சரியாக போய்ச் சேர வேண்டும் என்றும், அவரது உன்னதமான நோக்கத்திற்கு இந்த பிரபஞ்சம் முழுமையாக துணையாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க துடிக்கும் ஒரு நேர்மையான உள்ளத்திற்கு, காலம் நிச்சயம் கை கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இறுதியாக, இன்று நடைபெறும் தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், அந்த சவாலை அவர் எதிர்கொள்ளும் விதம் பிரமிக்க வைக்கிறது. எல்லா வசதிகளையும் துறந்துவிட்டு மக்கள் களத்திற்கு வந்த ஒருவனுக்கு, மக்கள் நிச்சயம் தகுந்த மரியாதையை வழங்குவார்கள். “மாற்றம் இல்லையேல் மாநிலம் உயராது” என்பதை உணர்ந்து அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்று நம்பப்படுகிறது. அந்தத் தைரியமும், மக்கள் மீதான அவரது அக்கறையும் கூடி வரும்போது, அவர் நினைத்த அந்த பொற்கால ஆட்சி மலர வேண்டுமா? வேண்டாமா? என்பது வாக்காளர்களின் கையில் தான் உள்ளது,.

Leave a Comment