தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் நாற்காலி என்பது எப்போதும் ஒரு தனித்துவமான அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தங்களது உடல்நலம், அரசியல் சூழல் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்பவே தங்களது பணி நேரங்களை அமைத்துக் கொண்டனர். தலைமை செயலகத்திற்கு எப்போது வருவார்கள், எப்போது கிளம்புவார்கள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாகவே நீடித்து வந்தது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று புதிய முதலமைச்சராகப்பொறுப்பேற்றுள்ள விஜய், கோட்டையின் அந்ப் பழைய நிர்வாக கலாச்சாரத்தையே முற்றிலும் மாற்றி அமைத்து ஒரு புதிய வரலாற்று பக்கத்தை தொடங்கியுள்ளார்.
இன்றைய புதிய தமிழக அரசின் நிர்வாக வேகத்தை கண்டு ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும், மூத்த அதிகாரத்துவமும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். முதலமைச்சர் விஜய் தினமும் காலையில் சரியாக 10 மணிக்கு முன்பாகவே சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்து விடுகிறார். வந்த நிமிடத்திலிருந்து அன்றைய நாளுக்கான திட்டங்கள், முந்தைய நாள் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் கோப்புகள் என தனது பணிகளை தொய்வில்லாமல் தொடங்குகிறார். இப்படி நேர மேலாண்மையை கச்சிதமாக கடைப்பிடிக்கும் ஒரு முதலமைச்சரை தங்களது பணிக்காலத்தில் தாங்கள் பார்த்ததே இல்லை என்று கோட்டை வட்டார ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொள்கின்றனர்.
அலுவலகத்திற்கு வந்தவுடன், துறை சார்ந்த செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் தினசரி ஆலோசனை கூட்டங்களை அவர் நடத்துகிறார். இந்த ஆலோசனைகள் வெறும் பெயரளவிலான சந்திப்பாக இல்லாமல், மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலை என்ன, கோப்புகள் ஏன் தேங்கிக் கிடக்கின்றன போன்ற நேரடியான விவாதங்களாக அமைகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, மதிய உணவுக்கான இடைவேளை என்பது வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ளப்படுகிறது. ஆடம்பரமான மதிய உணவுகளோ அல்லது நீண்ட ஓய்வு நேரங்களோ இன்றி, மிக எளிய முறையில் உணவை முடித்துவிட்டு உடனடியாக அடுத்த கூட்டத்திற்கு தயாராகி விடுகிறார்.
மதிய உணவிற்கு பிறகும், மாலை 6 மணி வரை முழுக்க முழுக்க பல்வேறு முக்கிய துறைகளின் ஆலோசனைகள், புதிய அரசாணைகளுக்கான உத்தரவுகள் மற்றும் மாவட்ட வாரியான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுகள் எனத் தொடர்ச்சியாக பணிகள் நீடிக்கின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை போல மிகவும் சுறுசுறுப்பாகவும், தொழில்முறை நேர்த்தியுடனும் முதலமைச்சர் செயல்படுவது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் மிக அதிவேகமாக இயங்க வைத்துள்ளது. கோட்டையில் உள்ள ஒவ்வொரு துறையும் தற்போது தேக்கநிலையை விடுத்து, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி ஓட தொடங்கியுள்ளது.
நினைத்த நேரத்தில் கோட்டைக்கு வருவதும், நினைக்கும் போது கிளம்பி செல்வதுமாக இருந்த பழைய முதலமைச்சர்களின் பாணியை மக்கள் நீண்ட காலமாக பார்த்து பழகிவிட்டனர். ஆட்சி அதிகாரம் என்பது தங்களுக்கு கிடைத்த ஒரு சுகபோகம் என்று கருதாமல், அது மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு முழுநேரக் கடமை என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் விஜய் நிரூபித்து வருகிறார். எப்படி இருந்த முதலமைச்சர் சீட் இப்போது எவ்வளவு பொறுப்புமிக்கதாகவும், உழைக்கக்கூடிய இடமாகவும் மாறியிருக்கிறது என்பதை தமிழக மக்கள் தற்போதைய எதார்த்த நிர்வாக மாற்றங்களின் மூலம் கண்கூடாக உணர்ந்து வருகின்றனர்.
புதிய முதலமைச்சரின் இந்த அதிரடியான உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கூர்ந்து கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள், தமிழக அரசியலின் எதிர்காலம் முற்றிலும் விஜய் கைகளுக்குள் சென்றுவிட்டதாக கருதுகின்றனர். ஒரு தலைவனின் உழைப்பு நேர்மையாகவும், மக்கள் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டும் இருக்கும் பட்சத்தில், அவரை மக்கள் தங்களது இதயங்களில் நிரந்தரமாக அமர வைத்து விடுவார்கள். தற்போது தமிழகத்தில் போய்க்கொண்டிருக்கும் இந்த அதிரடி நிர்வாக போக்கைப் பார்த்தால், இன்னும் ஒரு 20 வருடங்களுக்கு தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய்யை யாராலும் அசைக்க முடியாது என்பது மட்டும் அப்பட்டமான உண்மையாக தெரிகிறது