என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்களே… கரூரில் திமுகவை விளாசி எடுத்த முதல்வர் விஜய்.. இனி ஒரு மாசத்துக்கு வாடகை வாய்களுக்கு இன்று விஜய் பேசியதுதான் கண்டெண்ட்.. பல யூடியூப் சேனல்கள் இந்த அரை மணி நேர பேச்சை வைத்து ஆறு மாதம் தேற்றிவிடும்.. மாசத்துக்கு ஒருமுறை பேசினாலும் ஒவ்வொரு வார்த்தையும் மணிமணியா இருந்துச்சு…

என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், மனதளவில் சில காயங்களை மறக்க முடியாது; அது அனைவரது வாழ்க்கையிலும் நடப்பதுதான். அந்த வகையில், எனக்கு ஏற்பட்ட காயங்களிலேயே கரூர் சம்பவம் மிகவும் வலியானது.

மக்களைச் சந்திக்கவும், அவர்களின் பிரச்சினைகளை எடுத்துப் பேசவும் இந்தச் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கினேன். அரியலூரை முடித்துவிட்டு பெரம்பலூர் செல்லும்போது, காவல்துறை கூட்டம் அதிகமாக இருப்பதாக எச்சரித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, நான் அந்த முடிவை ஏற்றுத் திரும்பிச் சென்றேன், அதற்காக மக்களிடமும் மன்னிப்பு கேட்டேன். ஆனால், நாமக்கல் முடிந்ததும் கரூர் வந்தபோது, காவல்துறை எனக்குச் சரியான எச்சரிக்கை கொடுக்கவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியைத் தடுத்திருக்கலாம். ஆனால், எந்த எச்சரிக்கையும் செய்யாமல் அந்த நெடுஞ்சாலை பகுதிக்கு எங்களைக் கூட்டி வந்து, ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

இந்தச் சம்பவத்தில், என் அக்கா, தங்கைகளின் குழந்தைகளை இழந்திருக்கிறோம். என் புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்த, கடவுள் போன்ற அந்தப் பிஞ்சுகளை இழந்தேன். அந்த வலியோடு நான் வீட்டிலிருந்தபோது, நான் ஓடி ஒளிந்துவிட்டதாக ஏளனம் செய்கிறார்கள். வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறீர்களா? அத்தனை கூட்டம் இருந்தபோது, அதற்கேற்ற பாதுகாப்பு வழங்கினீர்களா? இவ்வளவு காயங்களைக் கொடுத்துவிட்டு, அரசியல் ஆதாயம் தேடுகிறீர்கள். சட்டப்பேரவையில் ஸ்டாலின் சார் பழியை என் மீது திருப்புவது எந்த வகையில் நியாயம்? நான் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தவன்; எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவன் நான்.

எதிர்க்கட்சிகள் என் அரசு மீது ‘டிசைன் டிசைனாக’ குறைகளைச் சொல்கிறார்கள். லஞ்சம், ஊழல் குறித்துப் பேசுகிறார்கள். ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று நான் சட்டப்பேரவையில் சொன்னவுடன், அவர்கள் ஏன் பயந்து ஓடினார்கள்? குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். சென்னையில் பாலம் கட்டும் டெண்டரில் நடந்த முறைகேடுகளைத் தோண்டி எடுத்துள்ளோம். எல்.என்.டி நிறுவனத்துடன் 18,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளோம், அதன் மூலம் 8,200 பேருக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்காக 134 கோடியில் சிறப்புத் தொகுப்பு அறிவித்துள்ளோம். அண்ணா பிறந்த நாளில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான் வெறும் ‘ரீல்’ தாய்மாமன் அல்ல, ‘ரியல்’ தாய்மாமன்.

மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரத்தில் யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். சும்மா பேசிப் பழி போட்டுவிட்டு மக்களை நடுத்தெருவில் விடுவது எதிர்க்கட்சிகளின் வாடிக்கை.

என்னை மிரட்டவோ, மக்களை விட்டு விலக்கவோ முடியாது. பணமா, ஜனமா என்று கேட்டால், எப்போதும் ஜனம் தான் எனக்கு முக்கியம். அதிகாரத்தைப் பயன்படுத்தி யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லுங்கள். 2026 தேர்தலில், எதிர்க்கட்சிகளுக்கு எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு மக்கள் நிரந்தரமான பதிலடி கொடுக்க வேண்டும். கரூரில் நிகழ்ந்த சதி மற்றும் சூழ்ச்சிகளை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த, இங்கு தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

கரூரில் நடந்த துயரத்தை மீண்டும் நினைவுபடுத்தும் அந்தப் பகுதிக்கு, தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

Leave a Comment