இந்திய அரசியலில் மக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை என்பதையும், காலத்திற்கேற்ப அவர்கள் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் பிகார் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபீன் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாங்கிபூர் தொகுதி, நீண்ட காலமாக அந்தக் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மாநிலங்களவைக்குச் சென்றதைத் தொடர்ந்து வந்த இடைத்தேர்தல் களம், பாரம்பரிய அரசியல் கணக்குகளைத் தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது.
இந்தத் தொகுதியில் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து தற்போது களமிறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர், தனது ‘ஜன் சுராஜ்’ கட்சி சார்பில் போட்டியிட்டு முத்திரை பதித்துள்ளார். பா.ஜ.க.வின் பாரம்பரியக் கோட்டையாகக் கருதப்பட்ட அந்த இடத்திலேயே அவர் மிக வலுவான வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்து இருப்பது, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக தங்களை ஆட்சி செய்து வருபவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும், மாற்று நிர்வாகத்தை நோக்கிய வாக்காளர்களின் மனமாற்றத்தையும் இந்தத் தேர்தல் முடிவு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தேசிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் திருப்பம், தமிழக அரசியலுக்கும் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வரவிருக்கும் காலங்களில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் எந்தளவுக்கு மக்களிடம் சென்றடைந்துள்ளன என்பதை இந்த முடிவுகள் நினைவூட்டுகின்றன. எந்தவொரு கட்சியும் தாங்கள் நினைக்கும் கோட்டை எப்போதும் பாதுகாப்பானது என்று அசால்ட்டாக இருக்க முடியாது என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளன.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த வேளையில், எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டியது அவசியமாகிறது. மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வெளிப்படையான ஆட்சிக்கும் எப்போதுமே முன்னுரிமை அளிப்பார்கள் என்பதற்கு பிகார் களமே சாட்சியாகும். எனவே, ஆளுங்கட்சியினர் ஒவ்வொருவரும் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.
இத்தகைய சூழலில், வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் தவெக கட்சியினர் தங்களது முழு கவனத்தையும் மக்கள் பணிகளிலும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதிலும் மட்டுமே செலுத்த வேண்டும். எப்பேர்ப்பட்ட பலமான கோட்டையாக இருந்தாலும் மக்களின் மனநிலை மாறும்போது அது தகர்ந்து போகும் என்பதை உணர்ந்து, அடிமட்ட அளவில் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். தேசிய அளவில் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது.
மாநிலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, தலைவர் விஜய்யின் தூய்மையான மற்றும் துணிச்சலான ஆட்சிக்கு மக்கள் எப்போதுமே முழு ஆதரவளிப்பார்கள் என்றாலும், சற்றும் தளராமல் கவனமுடன் களப்பணியாற்ற வேண்டும். பீகார் தேர்தல் உணர்த்தும் இந்த வலிமையான அரசியல் எச்சரிக்கையை ஏற்று, தமிழக வெற்றிக் கழகம் தனது வெற்றிகரமான பாதையை நோக்கி அசுர வேகத்தில் நடைபோடத் தயாராக வேண்டும்.