அண்ணாவும் கலைஞரும் மேடையில் பேசினா, ஊரே கை தட்டும்… ஆனா இன்னைக்கு இருக்கிற தி.மு.க தலைங்களோட பேச்சைக் கேட்டா, காதுல ரத்தம்தான் வருது! அரசியல் மேடைகளோட தரத்தை எந்த அளவுக்குக் கீழ இறக்கிட்டாங்கன்னு அரசியல் நோக்ககர்களே முகம் சுழிக்கிறாங்க. அதுலயும் நேத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடிச்ச லூட்டியும், பேசிய கொச்சையான வார்த்தைகளும் நாகரிகமான சமூகத்தையே தலைகுனிய வச்சிருச்சு. ஒரு எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிறவரு இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவாருன்னு யாராவது நினைச்சு பார்த்திருப்பாங்களா?
இப்படி கண்டபடி பேசிட்டு இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. இன்னைக்குப் போலீஸ் வந்து கைது பண்ணினாலும், அவரோட திமிருக்கு அளவே இல்ல. “நான் சட்டமன்றத்துக்கு வந்தா கேள்வி கேட்டு எல்லாரையும் அலறவிட்டுடுவேன்”னு மீடியா முன்னாடி இன்னும் பில்டப் கொடுத்துட்டு இருக்காரு. தவெக அரசை வம்புக்கு இழுக்கப் பாக்குறாராம்! தன்னை அரெஸ்ட் பண்ணதை ஒரு காமெடியா பாக்குறேன்னு வேற நக்கல் அடிக்கிறாரு. பொதுவாழ்வுல இருக்கிறவங்களுக்கு இருக்க வேண்டிய கொஞ்ச நஞ்சம் பொறுப்புணர்வுகூட இல்லாம இப்படிப் பேசினா மக்கள் சும்மா விடுவாங்களா?
இப்போ கரெக்டா பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் கேஸ் போட்டு உள்ளே தள்ளியிருக்காங்க போலீஸ். ஆனாலும் அந்த திமிர் குறையல. இவரைக் கைது பண்ணி விசாரிப்பதற்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல போலீஸ் தீவிரமா காய் நகர்த்தி வருது. ஆளுங்கட்சியின் கைக்கூலியா இருந்துட்டு என்ன வேணாலும் பேசலாம், தப்பிக்கலாம்னு நினைச்ச காலமெல்லாம் இப்போ மலையேறிடுச்சு! தளபதி விஜய் தலைமையில நேர்மையான ஆட்சி நடக்குது; இங்க தப்பு செஞ்சா யாருக்காக இருந்தாலும் கைவிலங்கு விழத்தான் செய்யும்.
எதிர்க்கட்சித் தலைவர்னா மக்களுக்கு வழிகாட்டணும், மரியாதையா நடந்துக்கணும். ஆனா அதை விடுத்துட்டு ஊர் வாயைக் கிழிச்சுட்டு, போலீஸ் வண்டில ஏறும்போதுகூட அந்த பில்டப் குறையலன்னா என்ன அர்த்தம்? தி.மு.க-வோட இந்தத் தரம் கெட்ட அரசியலை மூத்த தலைவர்களுமே தட்டிக் கேட்காம மௌனமா வேடிக்கை பார்க்குறது பரிதாபமா இருக்கு. காலம் மாறிடுச்சு, மக்கள் விழிப்புணர்வோடு இருக்காங்க. இனிமே இந்த ஆபாசப் பேச்சுகளும் மிரட்டல் அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவேகாது!