உங்களுக்கு அடிக்கடி கை,கால்கள் மரத்துப் போகுதா?. அதற்கு என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.
நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்திருந்து எழுந்திருக்கும் போது கை கால்கள் மரத்துப் போவதுண்டு. இப்பிரச்சனையை அதிக மக்கள் சந்திக்கின்றனர். நீண்ட நேரம் கால்களை மடக்கி அமர்ந்திருக்கும் போது கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை.
ரத்த ஓட்டம் தடைபடுவதால் கை கால்கள் மரத்துப் போகிறது. இதனால் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இன்னும் சில பேருக்கு செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
இது போன்ற பிரச்சனைகளை ஒரு சில உணவு வகைகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும் சரியான ரத்த ஓட்டத்தை உறுதி செய்ய ஒருவர் செய்ய வேண்டிய சில பயனுள்ள உணவு மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒமேகா-3 ரத்த ஓட்ட பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். இவை மீன்களில் அதிகம் காணப்படுகிறது. மீனில் உள்ள ஒமேகா-3 அமிலங்கள் இந்த செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும். அவை இரத்த குழாய்களை ரத்தக் கட்டி இலிருந்து தடுக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றது.
உடலின் ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. மத்தி மீன்களின் ஒமேகா 3 ஊட்டச்சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன.