சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குங்கள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்.. மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ சொந்தமாக விமான நிறுவனங்களே இல்லை.. அப்புறம் எதுக்கு விமான நிலையம் மட்டும் அரசுக்கு?

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குங்கள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்.. மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ சொந்தமாக விமான நிறுவனங்களே இல்லை.. அப்புறம் எதுக்கு விமான நிலையம் மட்டும் அரசுக்கு? தனியார்மயமான அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் எல்லாம் ஜொலிக்குது.. அரசிடம் உள்ள சென்னை விமான நிலையம் சொதப்பலா இருக்குது.. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு சம்மதிக்குமா? விசிக , காங்கிரஸ் சம்மதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றியமைத்து, அதனை உடனடியாகத் தனியார்மயமாக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ள விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் கடந்த பத்து ஆண்டுகளாகப் பின்தங்கியுள்ளதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிர்வாகத்தில் பயணிகள் மற்றும் அரசு திருப்தியடையவில்லை என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயணிகள் வருகை, விமான இயக்கங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து என அனைத்துப் பரிமாணங்களிலும் சென்னை விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2014-15 காலக்கட்டங்களில் மத்திய அரசால் சென்னை உள்ளிட்ட சில முக்கிய விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அன்றைய நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தின. இதன் காரணமாக அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் போன்ற பிற மாநில விமான நிலையங்கள் தனியாரின் நவீன வசதிகளுடன் மேம்பட்டு முன்னேறிய போதிலும், சென்னை விமான நிலையம் மட்டும் பழைய கட்டமைப்புகளுடனே தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

தற்போது தவெக அரசு நிலைப்பாட்டை மாற்றி விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க முற்பட்டுள்ள நிலையில், கடந்த காலத்தில் இத்தகைய தனியார்மயமாக்கலை உகிரமாக எதிர்த்த கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் இக்கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தங்களது முந்தைய கொள்கை நிலைப்பாடுகளுக்கு மாறாக, தவெக அரசின் இந்தக் கோரிக்கையை இந்த கூட்டணிக் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள ஏஏஐ தலைமையகத்தின் ஒப்புதல்களுக்காகக் காத்திருந்து திட்டங்கள் தாமதமாவதைத் தவிர்க்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பொதுத்துறை நிறுவனத் தனியார்மயமாக்கலைத் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இது ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதுடன், அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும் பத்தல்த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment