ஒண்ணு சேர்ந்துட்டாங்கய்யா.. ஒண்ணு சேர்ந்துட்டாங்க.. சீனாவுடன் கைகோர்த்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக திறக்க டிரம்ப் முடிவு.. ஓகே சொன்ன சீனா.. கட்டணம் இன்றி எல்லா கப்பலும் இலவசமா செல்லலாம்.. அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்.. டிரம்ப் முடிவால் ஈரான் கடுங்கோபம்..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர்ப்பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகைக்கு பதிலடியாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

ஈரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தி வருவதால், இதற்கு பதிலடியாக ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை முடக்குவோம் என்று ஈரான் ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி எச்சரித்துள்ளார்.

ஈரானின் இறையாண்மையை பாதுகாக்கவும், தேசிய நலன்களை உறுதிப்படுத்தவும் இந்த தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க தயங்கப்போவதில்லை என்று ஈரான் அரசு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதற்கான ஒரு முன்னோட்டம் என்றும் ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிக்கும் நோக்கில் அமைந்துள்ள போதிலும், மற்ற வளைகுடா நாடுகளின் வணிக கப்பல் போக்குவரத்தை பாதிக்காது என்று அமெரிக்கா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இந்த சூழலை கையாளுவதற்கு பென்டகன் சுமார் 10,000 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

மற்றொரு முக்கிய திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில், ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக திறந்து வைக்க போவதாக தெரிவித்துள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புக்கொண்டதற்குப் பிரதிபலனாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்காகவும் இந்த உலகத்திற்காகவும் இந்த முடிவை எடுப்பதாகவும், இந்த சிக்கல் மீண்டும் ஒருபோதும் ஏற்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். விரைவில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையின் போது சீன அதிபரை சந்திக்கும் தருணத்திற்காக காத்திருப்பதாகவும், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் மிகத்துணிச்சலாக தெரிவித்துள்ளார்.

உலக எரிசக்தி பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் இந்த முட்டுக்கட்டை நீங்குமா அல்லது ஒரு பெரும் போராக வெடிக்குமா என்பது அடுத்த சில வாரங்களில் நடக்கப்போகும் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை பொறுத்தே அமையும்.

Leave a Comment