தமிழக அரசியலில் இப்போ ஒரு பெரிய நிலநடுக்கமே நடந்திருக்குன்னு சொல்லலாம்! எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிற உதயநிதி ஸ்டாலின் மேல தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் (Cr. No. 287/2026) பாய்ந்துள்ள வழக்குகள், தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் எந்த அளவுக்கு அதலபாதாளத்துக்குப் போயிருக்குன்னு கண்ணுக்கு நேரா காட்டியிருக்கு. மக்களுக்கு நல்ல வழியைச் சொல்ல வேண்டிய இடத்துல இருக்கிறவங்க, இப்படி ஊருக்குள்ள விஷ விதையைத் தூவுற மாதிரி பேசிட்டுத் திரிஞ்சா சட்டம் சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்குமா என்ன?
குறிப்பாக, BNS பிரிவு 79 மற்றும் 296(b)-ன் கீழ் கேஸ் போட்டு உள்ளே தள்ளியிருக்காங்க. எத்தனையோ முறை அரசியல்ல விவாதங்கள் பண்ணலாம், தப்பு குறை சொல்லலாம்; ஆனா, பெண்களின் மானத்தையே விலை பேசுற மாதிரி தரம் கெட்டுப் பேசுறதை எவனும் மன்னிக்க மாட்டான். அதுவும் போதாதுன்னு ஐ.டி ஆக்ட் (IT Act) பிரிவு 67-ஐயும் சேர்த்து, சோஷியல் மீடியாவில ஆபாசத்தை அள்ளி வீசுறவங்களுக்குச் சட்டம் எப்படி சம்மட்டி அடி கொடுக்கும்னு இப்போ நிரூபிச்சுக் காட்டியிருக்காங்க போலீஸ்.
மிரட்டல் விடுறது, பொதுச் சொத்துகளை அடிச்சு நொறுக்குறது, ஆர்ப்பாட்டம் பேர்ல ஊரை இரண்டாகக் கிழிக்கிறதுனு எல்லாமே இந்த வழக்குல கோர்வையாச் சேர்க்கப்பட்டிருக்கு. தமிழ்நாடு பொதுச் சொத்து சேத தடுப்புச் சட்டத்தின் கீழேயும் வழக்கு பதிவாகியிருக்கறதால, இனிமே அடாவடித்தனம் பண்ணினா தப்பிக்கவே முடியாது என்பது கன்ஃபார்ம்!
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்”னு வெறும் பேச்சோடு நிக்காம, விஜய் தலைமையிலான அரசு அதைச் செயலாக்கிக் காட்டியிருக்கு. “அதிகாரத்துல இருக்கோம், எதிர்க்கட்சியில இருக்கோம்; நாங்க என்ன வேணாலும் பேசுவோம், எங்களை யாரும் கேட்க முடியாது”ங்கிற திமிர்லாம் இனி தமிழ்நாட்டில் எடுபடாது. தப்பு செஞ்சா பெரிய தலைவனா இருந்தாலும் கம்பி எண்ணித்தான் ஆகணும்.
பொதுவாழ்வுல இருக்கிறவங்க நாக்கைக் கட்டுப்படுத்தணும். அதைவிட்டுட்டு போலீஸையும் சட்டத்தையும் பார்த்துக் மிரட்டுனா மக்கள் பார்த்துக்கிட்டே இருக்க மாட்டாங்க. தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க நினைக்கிற எந்தவொரு அயோக்கியனுக்கும் இந்த நடவடிக்கை ஒரு தக்க சாட்டையடி. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் ஒரு புதிய, நேர்மையான அத்தியாயத்துக்கு வழிவகுத்திருக்குன்னுதான் சொல்லணும்!